Published:Updated:

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம்!- காஞ்சியில் சிக்கிய 3 மாணவர்கள்?

யார் யாரெல்லாம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது மருத்துவக் கல்வி பயின்றுவருகிறார்கள் என்ற முழுத் தகவல் தெரியவரும் என்கிறது தகவல் அறிந்த வட்டாரம்.

surya
surya

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கு அடுத்தடுத்து புதிய புதிய திருப்பங்களைச் சந்தித்துவருகிறது. அந்த வகையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மேலும் மூன்று மாணவர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காகச் சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் இருவரும் நேற்று தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம்!- காஞ்சியில் சிக்கிய 3 மாணவர்கள்?

இந்நிலையில், வெங்கடேசனிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார், கேரளாவைச் சேர்ந்த நீட் ஏஜென்ட் ஒருவரைத் தேடி கேரளா புறப்பட்டுச் சென்றுள்ளனர். இது ஒருபுறம் என்றால், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் மூவர், இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களைக் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேனி அழைத்துவருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

காலை, தேனி சமதர்ம புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது. மேலும், யார் யாரெல்லாம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது மருத்துவக் கல்வி பயின்றுவருகிறார்கள் என்ற முழுத் தகவல் தெரியவரும் என்கிறது தகவல் அறிந்த வட்டாரம். ஆனால் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரகசியமாக இந்தக் கைதை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திடீர் திருப்பம்!- காஞ்சியில் சிக்கிய 3 மாணவர்கள்?

மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது போல, கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தனரா என்ற கோணத்திலும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் நீட் ஏஜென்டை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டிவருகின்றனர். ஏனெனில், நீட் ஏஜென்ட் பிடிபடும் சூழலில், இந்தியா முழுவதும் நீட் தேர்வில் யார்யாரெல்லாம் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர் என்ற தகவல் கிடைக்கப்பெரும் என நம்புறது சி.பி.சி.ஐ.டி.!