Published:Updated:

`உதித் சூர்யா குடும்பத்தினர் கொடுத்த தகவல்!’ - மேலும் 6 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி

நீட் ஆள்மாறாட்டம் வழக்கின் தொடர் விசாரணையில் 6 பேரைக் கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.!

Theni CBCID Office
Theni CBCID Office

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், தொடர் விசாரணையில் 6 பேரை கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

`உதித் சூர்யா குடும்பத்தினர் கொடுத்த தகவல்!’ - மேலும் 6 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி

உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நேற்று நீட் மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவி உட்பட 6 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

மாணவி அபிராமி அவருடைய தந்தை மாதவன், மாணவர் பிரவீன் அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல் அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்படுகிறார்கள். இன்று அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

`உதித் சூர்யா குடும்பத்தினர் கொடுத்த தகவல்!’ - மேலும் 6 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தமிழகத்தில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் பயின்றுவந்தவர்கள் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அபிராமி சத்யசாய் மருத்துவக்கல்லூரியிலும், பிரவீன் பாலாஜி மருத்துவக் கல்லூரியிலும், ராகுல், எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியிலும் பயின்றுவந்திருக்கிறார்கள். தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ். கைது செய்யப்பட்ட ஆறு பேர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.