Published:Updated:

நாகர்கோவில் காசி மீது ஏழாவது வழக்கு! - 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவலுக்கு நீதிமன்றம் அனுமதி

இன்ஜினீயர் சுஜி என்கிற காசி
இன்ஜினீயர் சுஜி என்கிற காசி

2019 மற்றும் 2020 தொடக்கத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் காசி, தனது வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. காசி கைதாவதற்கு முன்பு வரை அந்த இளம்பெண்ணுடன் பேசிவந்திருக்கிறார்.

சமூக வலைதளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்களிடம் காதலிப்பதுபோல் நடித்து அவர்களோடு தனியாக இருந்து, தனிமையில் இருப்பதைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற சுஜி மீது புகார் கிளம்பியது. ஆரம்பத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி புகாரளிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 24-ம் தேதி காசி கைதுசெய்யப்பட்டார். பின்னர் காசி மீது சிறுமி உள்ளிட்ட சில பெண்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் காசிக்கு உதவிய அவரது நண்பர் டேசன் ஜினோ கைதுசெய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு போலீஸார் காசி மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்தநிலையில் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் காசி
சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் காசி

வெளிமாநிலப் பெண்களையும் காசி ஏமாற்றியதால், இந்த வழக்கு கடந்த மே மாதம் 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதில் காசி பெண்களுடனான தொடர்பு குறித்து அவரது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்ததும், அதை அவரது தந்தை அழித்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காசியின் தந்தை தங்கப்பாண்டியனும் கைதுசெய்யப்பட்டார். காசி மீது மொத்தம் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் தற்போது புகாரளித்திருக்கிறார். இதையடுத்து காசி மீதான வழக்குகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது.

காசி வழக்கு: மெமரிகார்டு, ஹார்ட் டிஸ்க் ஆவணங்கள் அழிப்பு! சிபிசிஐடி வளையத்தில் தந்தை

சென்னையைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காசியைக் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணை நாகர்கோவில் முதன்மை நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு காசியை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதியளித்தது. வரும் 11-ம் தேதி மாலை 3 மணிக்கு காசியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.

காசி
காசி

2019 மற்றும் 2020 தொடக்கத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் காசி, தனது வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது. காசி கைதாவதற்கு முன்பு வரை அந்த இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். கல்லூரி படித்து முடித்த அந்த இளம்பெண், பயத்தின் காரணமாக இதுவரை புகாரளிக்க முன்வரவில்லை எனவும், அதனால் புகாரளிக்க தாமதமானதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு