Published:Updated:

`குளிர்பான வியாபாரிகள்; முதியோர்களுக்கு குறி!' - 8 ஆண்டுக்குப் பின் கைதான கொலையாளி

சீர்காழியில் கொடூரமாக நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளார்கள்.

சுரேஷ்
சுரேஷ்

நாகை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவைச் சேர்ந்தவர் முகமது யூனூஸ். அவரது மனைவி ராபியா பீவி. இவர்களது மகள் சமீரா பானு மற்றும் மாமியார் கதிஜா பீவி ஆகியோருடன் வசித்து வந்தார். 21.08.2011 அன்றிரவு கடைவீதிக்குச் சென்றிருந்த ராபியா பீவி வீட்டுக்கு வந்தபோது மகளும் மாமியாரும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கொலை
கொலை

இது தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சமிரா பானுவின் தந்தை முகமது யூசுப் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

வேலைக்கு சேர்ந்த 5வது நாளில் முதலாளியைக் கொன்ற வடஇந்திய இளைஞர்கள்! - அம்பத்தூர் அதிர்ச்சி

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீஸின் தீவிர விசாரணையில் இந்த இரட்டைக்கொலை வழக்கில் கடலூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கைது செய்துள்ளனர். மேலும், அவருடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட தினேஷ்குமார், கமல், ஆனந்தன் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

போலீஸ் ரிப்போர்ட்
போலீஸ் ரிப்போர்ட்

இந்த சுரேஷ்குமார் கும்பல் ரோஸ் மில்க், பாதாம்கீர் உள்ளிட்ட குளிர்பானங்களை விற்பது போன்று தனியாக வசிக்கும் முதியோர்களின் வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அவர்களைத் தாக்கி கொலை செய்துவிட்டு, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளை அடித்து வந்தது தெரியவந்துள்ளது. தஞ்சாவூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதேபோன்று கொள்ளையுடன் கொலை செய்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.