Published:Updated:

நீட் ஆள்மாறாட்ட வழக்கு! - உதித்சூர்யா, பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் தொடர்ந்து விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதித்சூர்யா மற்றும் அவரின் பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதித்சூர்யா
உதித்சூர்யா

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா, அவரின் தந்தை வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகிய மூவரையும் தேனி தனிப்படையினர் திருப்பதியில் நேற்று கைது செய்தது. தொடர்ந்து தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேற்று இரவு மணியளவில் கொண்டுவரப்பட்டனர். அப்போது முதற்கட்ட விசாரணை செய்தார் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ்.

உதித்சூர்யாவை அழைத்துச் செல்லும் போலீஸ்
உதித்சூர்யாவை அழைத்துச் செல்லும் போலீஸ்

பின்னர், காலையில் மீண்டும் விசாரணை செய்தார். இதைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துணைமுதல்வர் எழிலரசன் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் இன்று காலை 8.30 மணியளவில், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களிடமும் டி.எஸ்.பி விசாரணை செய்தார்.

`தேனிக்கு அழைத்துவரப்பட்ட உதித்சூர்யா!’ -`நீட் ஆள்மாறாட்டம்’ வழக்கில் வேகம் காட்டும் சி.பி.சி.ஐ.டி

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார், தேனி வர இருப்பதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ், தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ராதேவி இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்றனர். அங்கு வந்த எஸ்.பி விஜயகுமாரை கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர். கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு செய்தார்.

CBCID POLICE
CBCID POLICE

பின்னர், கேமரா கட்டுப்பட்டு அறை எங்கிருக்கிறது எனக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டார். அதற்கு, "கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் அறையில் உள்ளது" என்றனர். தொடர்ந்து முதல்வர் அறைக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்தார். தற்போது உதித்சூர்யா அவரின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார். விசாரணை முடிந்து உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை மற்றும் தாயாரை, ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்த இருக்கிறார்கள்.