Published:Updated:

` எங்கே போனார் இர்ஃபான்?!' - நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வெளியுறவுத்துறையை நாடும் சி.பி.சி.ஐ.டி

இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையர் மட்டும் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

Accuest In Theni CBCID Office
Accuest In Theni CBCID Office

சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடுவதை அறிந்து சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் மொரீசியஸ் தப்பிச் சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Theni CBCID Office
Theni CBCID Office

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான, உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

கூடவே, அவர்களின் தந்தையர் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையர் மட்டும் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், நீட் மோசடியில் தொடர்புடைய இன்னொரு மாணவன் மொரீசியஸ் தப்பிச் சென்றுள்ளதாகக் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Theni CBCID Office
Theni CBCID Office

இதுதொடர்பாக தகவல் தெரிவித்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், ``உதித்சூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி அபிராமி, அவரின் தந்தை மாதவன், மாணவன் பிரவீன், அவரின் தந்தை சரவணன், மாணவன் ராகுல், அவரின் தந்தை டேவிஸ் ஆகியோரைக் கைது செய்திருக்கிறோம். மேலும், இர்ஃபான் என்கிற மாணவரை தேடிச் சென்றபோது அவர், மொரீசியஸ் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால், இந்திய வெளியுறவுத்துறையின் உதவியை நாடியிருக்கிறோம். மொரீசியஸ் சென்று இர்ஃபானைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இர்ஃபான், மொரீசியஸில் மருத்துவம் படித்துப் பாதியில் திரும்பி வந்தவர் என்றும், அதனால், அங்கே அவருக்கு நல்ல தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள பிரவீன், ராகுல், சரவணன், டேவிஸ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், மேலும், இதில் யார் யாருக்கெல்லம் தொடர்பு என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.