Published:Updated:

திருவள்ளூர்: ``என் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது!" - உயிரிழந்த மாணவியின் சகோதரர் புகார்

திருவள்ளூர் - மாணவி படித்த பள்ளி

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரர் புகாரளித்திருக்கிறார்.

திருவள்ளூர்: ``என் தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது!" - உயிரிழந்த மாணவியின் சகோதரர் புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் சகோதரர் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
திருவள்ளூர் - மாணவி படித்த பள்ளி

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகிலுள்ள கீழச்சேரிப் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயது மகள், 12-ம் வகுப்பு படித்துவந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவி நேற்று காலை திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவல் காட்டுத்தீபோலப் பரவியதால் பள்ளி அமைந்திருக்கும் கிராமத்திலும், மாணவியின் சொந்த ஊரிலும் பதற்றம் நிலவியது. அதனால் உடனடியாக ஏராளமான போலீஸார் திருத்தணி, கீழச்சேரி பகுதியில் குவிக்கப்பட்டனர். மாணவியின் பெற்றோர், உறவினர்களிடம் போலீஸார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் ஏழு மணி நேரத்துக்கு மேல் போராட்டம் நடந்தது.

பள்ளி முன்பு குவிந்த பொதுமக்கள்
பள்ளி முன்பு குவிந்த பொதுமக்கள்

இந்த வழக்கை ஆரம்பத்தில் மப்பேடு போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவுசெய்திருந்தனர். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாணவியின் மரண வழக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து டி.எஸ்.பி செல்வக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினார். மாணவி தற்கொலை செய்துகொண்ட இடத்தையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வுசெய்தனர். இதற்கிடையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக (பி.எம்) வைக்கப்பட்டிருந்த மாணவியின் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது மாணவியின் சகோதரரும் உடனிருந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் சடலம், போலீஸ் பாதுகாப்புடன் சொந்த கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சூழலில் மாணவியின் சகோதரர், மப்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய தங்கை, கீழச்சேரியிலுள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்தார். இன்று (25.7.2022)- காலை 7:58 மணிக்கு எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவருக்கு பள்ளியிலிருந்து போன் செய்தவர், என்னுடைய தங்கை மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். உடனடியாக நாங்கள் பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது தூக்குப்போட்டு இறந்ததாகச் சொன்னார்கள்.

டி.ஜ.ஜி சத்யபிரியா
டி.ஜ.ஜி சத்யபிரியா

அதே பள்ளியில் படிக்கும் என்னுடைய சித்தப்பா மகளிடம் விசாரித்தபோது , காலையில்கூட என்னுடைய தங்கைதான் அவளுக்கு தலைசீவிவிட்டதாகவும், தற்போது பணிபுரியும் செரின் என்பவர் என் தங்கையைத் திட்டியதாகவும் தெரிவித்தார். அதனால்தான் என் தங்கை பள்ளிக்கு வரவில்லை என்று என்னுடைய சித்தப்பா மகளிடம் கூறியிருக்கிறார். மேலும் பள்ளி நிர்வாகம் எங்களுக்குச் சரியான பதிலும் சொல்லவில்லை. அதனால் என் தங்கை இறப்பில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. கொலை செய்தார்களா என்ற சந்தேகம் இருக்கிறது. என் தங்கை தூக்குப்போட்டு இறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. தற்கொலை செய்யும் அளவுக்கு அவர் கோழை கிடையாது. எனவே என் தங்கை மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆண்டனி ஸ்டாலின் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூன்று குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் தங்கை அளித்த தகவலின்படி விடுதியில் பணிபுரியும் செரினிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.