Published:Updated:

திண்டுக்கல்: பாச்சலூர் சிறுமி மர்ம மரண வழக்கு - தீவிர விசாரணையில் சிபிசிஐடி அதிகாரிகள்!

பாச்சலூர் சிறுமி மர்ம மரண வழக்கு
News
பாச்சலூர் சிறுமி மர்ம மரண வழக்கு

விவசாயக் கூலித் தொழிலாளியான சத்தியராஜ், ப்ரியா தம்பதி, மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் எனவும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி கடந்த 15-ம் தேதி தீயில் கருகிய நிலையில் உயிரிழந்ததார்.

சிறுமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டரா? என்ற கோணங்களில் திண்டுக்கல் டி.ஐ.ஜி விஜயகுமாரி தலைமையிலான போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி உடலில் பாலியல் ரீதியான பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாச்சலூர் கிராம மக்களிடமும், அந்தப் பள்ளியில் பயிலும் 106 மாணவ-மாணவிகளிடமும் பெண் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுமட்டுமல்லாது பாச்சலூர் அருகே உள்ள செம்பிராங்குளம், கடைசிகாடு, கரடிப்பாறை, சுடலைப்பாறை, குரங்கணிபாறை, பூதமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே பள்ளி ஆசிரியர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் போலீஸ், சிறுமியின் மர்ம மரணத்துக்கு விடைகாண முடியாமல் திணறினர்.

போராட்டம்
போராட்டம்

இதனால் விவசாயக் கூலித் தொழிலாளியான சத்தியராஜ், ப்ரியா தம்பதி, மகளின் இறப்புக்கு நீதி வேண்டும் எனவும், விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சிறுமியின் பெற்றோருக்கு ஆதரவாக கொடைக்கானல், மன்னவனூர், கூக்கால், பாச்சலூர் மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தினர். இதனிடையே அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறுமி உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கூறினர். இந்த நிலையில், டிசம்பர் 23-ம் தேதி டி.ஜி.பி சைலேந்திரபாபு பாச்சலூர் சிறுமி உயிரிழந்த வழக்கை சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெற்றோர்
பெற்றோர்

இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி தெற்கு மண்டல அதிகாரி முத்தரசி தலைமையிலான குழுவினர் பாச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைப் பார்வையிட்டு, ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், தூய்மைப்பணியாளர் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். சிறுமி உயிரிழந்து 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளதால் இனிமேலாவது சிறுமியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா என்ற எதிர்பார்ப்பில் சிறுமியின் பெற்றோரும், பாச்சலூர் மக்களும் இருக்கின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாரிடம் விசாரித்தபோது, ``எங்களுடைய விசாரணை அறிக்கை முழுவதையும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் தர உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வார்கள்'' என்றனர்.