Published:Updated:

ஊருக்குச் சென்றபோது திருட்டுப்போன பொருள்கள்! - பக்கத்து வீட்டுக்காரரைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி

அன்பழகன்
அன்பழகன்

தூத்துக்குடியில் பூட்டிய வீட்டின் மேற்கூரை வழியே உள்ளே இறங்கி பணம், நகை, சிலிண்டர், பாத்திரங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளன. அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைப் பார்த்தபோது...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், விவசாயம் செய்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, அன்பழகன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருக்கிறார். மீண்டும் ஊருக்கு வந்ததும், வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டில் பொருள்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்திருக்கிறார். சமையலறையிலுள்ள சிலிண்டர், குடம், பாத்திரங்கள் ஆகியவை காணமால்போயிருந்தன.

அன்பழகனின் வீட்டு மாடி வழியே உள்ளே நுழையும் நபர்
அன்பழகனின் வீட்டு மாடி வழியே உள்ளே நுழையும் நபர்

அலமாரியைப் பார்த்தபோது அதிலிருந்த நான்கு பவுன் தங்கநகை, ரூ.40,000 பணம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பேட்டரி, வாட்ச் ஆகியவையும் திருடுபோனது தெரியவந்தது. வெளியிலிருந்த மின்மோட்டாரை திருடுவதற்காக முயன்றிருக்கின்றனர். ஆனால், அதைத் திருட முடியவில்லை என்பதால் அதிலிருந்த வயர்களை கட் செய்துவிட்டு, டேங்கிலிருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்தநிலையில், அருகிலிருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அன்பழகன் பார்த்தபோது, அவரின் வீட்டுக்கருகே கோயில் விழாவுக்காகப் போடப்பட்டிருந்த பந்தல்கம்பு வழியாக, சட்டை அணியாத ஒரு நபர் தனது வீட்டுக்குள் ஏறி குதிப்பது தெரியவந்தது. அந்த நபர், தனது வீட்டின் அருகிலிருக்கும் ராமமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

வீட்டுக்குள் நுழைவதற்கு ஏணிப்படி வழி
வீட்டுக்குள் நுழைவதற்கு ஏணிப்படி வழி

வீட்டின் உள்புறத்திலிருந்து மாடிக்குச் செல்வதற்காக போடப்பட்டிருந்த ஏணிப் படிவழியாக இறங்கி, திருடிய பின்னர், வீட்டின் உள் பகுதிக்குச் செல்வதற்காகப் போடப்பட்டிருந்த கதவைத் திறந்து பொருள்களைக் கொண்டு சென்றுவிட்டு, பின்னர் கதவை அடைத்துவிட்டு, மீண்டும் மாடி வழியாக அந்த நபர் சென்றிருக்கலாம் என்கிறார் அன்பழகன். இதையடுத்து அன்பழகன், கயத்தார் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிப்பதிவுகளுடன் புகார் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்

இதையடுத்து, போலீஸார் திருட்டுப்போன அன்பழகனின் வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பிறகு ராமமூர்த்தி ஊரில் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்த மறுநாள் ராமமூர்த்தியின் மனைவி பத்திரகாளி, அன்பழகன் வீட்டின் அருகில் இருக்கும் செல்வி ஆகிய இரண்டு பேரும், அன்பழகனின் தாய் அன்னக்கிளியைத் தாக்கியுள்ளனர். தன் தாய் தாக்கப்பட்டது குறித்தும் அன்பழகன் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

அன்பழகனின் வீடு
அன்பழகனின் வீடு

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார் அன்பழகன். இது குறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸார், ``அன்பழகன் முதலில் தன் வீட்டில் சிலிண்டர் மட்டும்தான் திருடு போயிருக்கிறது என்றார். தற்போது பணம், நகைகளைக் காணவில்லை என்கிறார். சிசிடிவி காட்சிப் பதிவுகளைவைத்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர். பக்கத்து வீட்டு நபரே ஏறிக் குதித்து பொருள்களை திருடிச் சென்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு