Published:Updated:

மயக்கமடைய செய்து தாய், மகள் கொலை; திட்டமிட்டு துண்டிக்கப்பட்ட சிசிடிவி! - மருத்துவமனையில் பகீர்

கொலை
News
கொலை

``மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கும் மயக்க மருத்து கொடுத்து, திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்." - போலீஸ்

Published:Updated:

மயக்கமடைய செய்து தாய், மகள் கொலை; திட்டமிட்டு துண்டிக்கப்பட்ட சிசிடிவி! - மருத்துவமனையில் பகீர்

``மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இருவருக்கும் மயக்க மருத்து கொடுத்து, திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்." - போலீஸ்

கொலை
News
கொலை

அகமதாபாத் மணிநகரில் வசித்து வந்த பார்தி வாலா, அவரின் தாயார் சம்பா இருவரும் புலாபாய் பார்க் அருகே உள்ள இ.என்.டி மருத்துவமனைகு நேற்று சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வழக்கம் போல இ.என்.டி மருத்துவமனை ஊழியர் ஒருவர் மருத்துவமனையின் ஸ்டோரேஜ் ரூமை திறந்து பார்த்த போது, அந்த அறையில் 30 வயது பெண்ணின் சடலம் கிடந்திருக்கிறது. உடனே காவல் நிலையத்துக்கு தகவலளித்த மருத்துவ ஊழியர்கள், சிசிடிவி கேமராக்களையும் சோதித்திருக்கிறார்கள்.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா
கோப்புபடம்

அந்த சிசிடிவி-யில் இறந்தப் பெண்ணுடன் ஒரு வயதான பெண்ணும் வருவது பதிவாகியிருந்தது. ஆனால், அதன்பிறகான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மருத்துவமனை முழுவதும் சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஓர் அறையின் படுக்கைக்கு கீழே பழைய போர்வையால் சுற்றப்பட்ட ஒரு சடலம் இருந்திருக்கிறது.

அதையும் கைப்பற்றிய காவல்துறை இரண்டு உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது. இது தொடர்பாக காவல்துறை தரப்பு, ``சம்பா என்ற பெண்ணுக்கு கால் வலி இருந்ததால், தன் மகள் பார்தி வாலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். பார்தி வாலாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். பார்தி வாலா தன் தாயாருடன் வாழ்வதாக தெரிகிறது. பார்வதி வாலாவின் மாமியாருக்கு தெரிந்த ஒருவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்திருக்கிறார். இவர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதாக, இரண்டு பெண்களையும் மருத்துவர் இல்லாத நேரத்தில் மருத்துவமனைக்கு வரவழைத்திருக்கிறார்.

போலீஸ்
போலீஸ்

இருவரும் சிகிச்சைக்காக வந்திருக்கிறார்கள். பின்னர் அவர் இருவருக்கும் மயக்கமருத்து கொடுத்து, திட்டமிட்டு கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். குற்றம்சாட்டப்பட்ட நபரை கைதுசெய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும்" எனத் தெரிவித்திருக்கிறது.