Published:Updated:

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!

தற்கொலை

சேலத்தில் குடும்பத் தகராறில் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை - சேலத்தில் அதிர்ச்சி!

சேலத்தில் குடும்பத் தகராறில் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

சேலம் இரும்பாலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை வீரராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். இவர், தனது குடும்பத்தோடு இரும்பாலையிலுள்ள குடியிருப்பில் வசித்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இரும்பாலை முதல் கேட்டில் சக்திவேல் பாதுகாப்புப் பணியில் இருந்தார். மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவருக்குப் பணி நேரம். இந்த நிலையில் மாலை 3 மணியளவில் சக்திவேலிடமிருந்த இன்சாஸ் ரக துப்பாக்கியால் தன்னைத் தானே திடீரென சுட்டுக்கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, சக்திவேல் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சக்திவேல்
சக்திவேல்

உடனடியாக அவரை மீட்டு இரும்பாலையிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். ஆனால், சக்திவேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் உதவி கமிஷனர் அசோகன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், முதற்கட்டமாக சக்திவேல் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேலை செய்யும் இடத்தில் ஏதும் பிரச்னையா என்கிற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.