Published:Updated:

நாமக்கல்: பெண் காவலரிடமே 3 பவுன் நகை பறிப்பு; தொடரும் வழிப்பறி! - அச்சத்தில் பொதுமக்கள்

பரமத்தி
News
பரமத்தி ( நா.ராஜமுருகன் )

``பொதுமக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ்கிட்டயே நகையை வழிப்பறி செஞ்சுருக்காங்க. அப்போ, பொதுமக்களுக்கு என்ன கதி ஆகும்? கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீஸை மறித்து, மர்ம நபர்கள் அவரிடம் மூன்று பவுன் நகையைப் பறித்துச் சென்றிருக்கும் சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பரமத்தி காவல் நிலையம்
பரமத்தி காவல் நிலையம்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சண்முகாநகரைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மனைவி மணிமேகலை (42). இவர், நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகேயுள்ள குடிமைப்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். இவர், இரவுப் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, பரமத்தி அருகே இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் மணிமேகலை சென்ற மொபட்டைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும் மணிமேகலை கழுத்தில் அணிந்திருந்த ஆறி பவுன் நகையைப் பறிக்க முயன்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், மணிமேகலை நகையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால், கழுத்திலிருந்த பாதி நகையான மூன்று பவுன் நகையை மட்டும் மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில், நிலை தடுமாறி கீழே விழந்த பெண் காவலர் மணிமேகலையை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து பரமத்தி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, பெண் காவலரிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர். இரவு நேரத்தில் தனியாக மொபட்டில் சென்ற பெண் காவலரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரமத்தி பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

பரமத்தி
பரமத்தி
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், இது குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``நாமக்கல் மாவட்டத்தில் இது போன்று கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. காவல்துறை மெத்தனமாகச் செயல்படுவதுதான் இதற்குக் காரணம். தொடர்ச்சியாக இது போன்ற வழிப்பறிச் சம்பவங்கள் நடப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்களைப் பிடித்தனர். இருந்தாலும், வழிப்பறிச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ்கிட்டயே நகையை வழிப்பறி செஞ்சுருக்காங்க. அப்போ, பொதுமக்களுக்கு என்ன கதி? நாமக்கல் மாவட்ட காவல்துறை வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து, அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள்.