Published:Updated:

`அலறல் சத்தம் கேட்டது..ஆனால்!' - தெலங்கானா, உ.பியைத் தொடர்ந்து மே.வங்கத்தை அதிரவைத்த இளம்பெண் சடலம்

மாந்தோப்பில் இளம்பெண் சடலம்
மாந்தோப்பில் இளம்பெண் சடலம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள மாந்தோப்பில் நேற்று இளம்பெண் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

மாந்தோப்பில்  இளம்பெண் சடலம்
மாந்தோப்பில் இளம்பெண் சடலம்

இதுகுறித்து பேசிய Tipajani கிராம மக்கள், ``மாந்தோப்பு அமைந்துள்ள பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்த இடத்தில் நிறைய குற்றச்செயல்கள் நடக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தத் தோட்டத்தில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. ஆனால், நாங்கள் தேடிப்பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. மாம்பழ சீசனில் மட்டும்தான் இந்தப்பகுதி பரபரப்பாக இருக்கும். மற்ற நேரங்களில் வெறிச்சோடிதான் காணப்படும். இதற்கு அருகில்தான் பெண்கள் பள்ளி ஒன்று இருக்கிறது. நீண்டநாள்களாக போலீஸ் செக்போஸ்ட் ஒன்று அமைக்கச் சொல்லிக் கேட்டு வருகிறோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை” என்கின்றனர்.

`புதையல்; போதையில் உளறல்; துப்பாக்கி முனையில் கொலை!’- கூலிப்படையுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி மகன்
``வாழ விரும்புகிறேன்; உயிரோடு இருப்பேனா?"- மருத்துவர்களிடம் கதறிய உன்னாவ் இளம்பெண்

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய மால்டா எஸ்.பி அலோக் ரஜோரி, ``எரிந்த நிலையில் பெண் சடலத்தை மீட்டோம். அவரது உடலை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததை அடையாளம் கண்டோம். எனவே, பிரேத பரிசோதனைக்காக மால்டா மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இப்போது, பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அவர், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டாரா எனத் தெரியவில்லை. உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது'' என்றார்.

மம்தா
மம்தா

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ``மால்டா விவகாரத்தை போலீஸ் கையில் எடுத்துள்ளது. பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை. பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த வன்முறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என போலீஸாருக்குத் தெரிவித்துள்ளேன்" என்று பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு