Published:Updated:

`நூதன மோசடியில் கில்லாடியான சீட்டிங் பாபு!’ - குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருவாரூர் காவல்துறை
News
திருவாரூர் காவல்துறை

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியிலுள்ள தாரணி நகரைச் சேர்ந்தவர் ரெத்தினசம்பந்தம். இவரின் மகன் ஆர்.எஸ்.பாபு என்கிற சீட்டிங் பாபு. 42 வயதான சீட்டிங் பாபு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். காவல் நிலையத்தில் ரெளடி பட்டிலில் இடம்பெற்றிருந்த இவ,ர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, குடவாசல் காவல் சரகப் பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, சொத்துகளை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாக காவல்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்துப் பேசிய திருவாரூர் மாவட்ட காவல்துறையினர், ``இவரோட ஒரிஜினல் பேரு பாபுதான். மத்தவங்களை நம்பவெச்சு சீட்டிங் செய்றதுல இவர் மிகப்பெரிய கில்லாடி. பார்க்குறதுக்கு எப்பவுமே நல்லா வெள்ளை நிறத்தில் டிரெஸ் பண்ணிக்கிட்டு டிப்-டாப்பா இருப்பார். யாரையாவது ஒருத்தரை குறிவெச்சு, சீட்டிங் செய்யணும்னு முடிவெடுத்துட்டாருன்னா, நல்லா சாமர்த்தியமாப் பேசி தன்னை நம்பவெச்சு, காரியத்தைச் சாதிச்சுடுவார். இதனாலேயே இவரை இந்தப் பகுதி மக்கள் `சீட்டிங் பாபு’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

பாபு
பாபு

சில வருசங்களுக்கு முன்னாடி சீட்டிங் பாபு ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செஞ்சுக்கிட்டு இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைத் தமிழ் புலிகள் உள்ளிட்ட கட்சிகள்ல பல முக்கியப் பொறுப்புகளிலெல்லாம் இருந்திருக்கார். அதுக்குப் பிறகு வெளிநாட்டுல வேலை வாங்கி தர்றதா, பலர்கிட்ட பணம் மோசடி செய்யுறதா புகார்கள் வந்துச்சு. கட்டப்பஞ்சாயத்துகள்லயும் ஈடுபட்டுக்கிட்டு இருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுக்கிடையிலதான் நூதனமான முறையில் மத்தவங்களோட கார்களை அபகரிச்சு மோசடிகள்ல ஈடுபட்டார். விலையுயர்ந்த சொகுசு கார்கள் வெச்சிருக்கும் பெரிய பணக்காரங்களை அணுகி, ``நான் டிராவல்ஸ் நடத்திக்கிட்டு இருக்கேன். மாசா மாசம் உங்களுக்கு கரெக்ட்டா பணம் கொடுத்துடுவேன்’’னு சொல்லி காரை ஓட்டிக்கிட்டு வந்துடுவார். வாக்குறுதி கொடுத்த மாதிரியே மாசா மாசம், ஆனா ரொம்ப குறைவான தொகையை கார் ஓனருக்கு கொடுத்துடுவார். ஆனால் அந்த சொகுசு காரை, சீட்டிங் பாபு, வேறொரு நபர்கிட்ட லீஸுக்குக் கொடுத்து பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிடுவார்.

லீஸுங்கறதுனால ஆர்.சி புக் கேட்க மாட்டாங்க. சில மாசங்களுக்கு முன்னாடிதான் இவரோட விநோத மோசடி வெளிச்சத்துக்கு வந்துச்சு. சீட்டிங் பாபுகிட்ட தன்னோட காரை வாடகைக்குக் கொடுத்திருந்த நபர், வெளிமாநிலத்துல, வேற யாரோ ஒருத்தர் தன்னோட காரை ஓட்டிக்கிட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சு விசாரிச்சிருக்கார்.

திருவாரூர் காவல்துறை
திருவாரூர் காவல்துறை

அப்பதான் அவருக்கு இந்த நூதன மோசடி தெரியவந்திருக்கு. அது தொடர்பாக, காவல் நிலையத்துல வழக்கு பதிவு செய்யப்பட்டு, சீட்டிங் பாபு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன்ல வெளியில் வந்த பிறகும் இவர்மேல புகார்கள் வந்துக்கிட்டே இருந்துச்சு. இதனால்தான் இவரை குண்டர் சட்டத்துல சிறையில அடைக்க, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கார்’’ எனத் தெரிவித்தார்கள்.