Published:Updated:

`கொள்ளையனுக்கு தெரிந்த ஏடிஎம் இயந்திரத்தின் பாஸ்வேர்டு' -கிருமிநாசினி தெளிக்க வந்தவரால் அதிர்ச்சி #Chennai

ஏடிஎம்
ஏடிஎம்

சென்னை மதுரவாயலில் செயல்படும் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைக்காமல் நடந்த கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனி கிழக்கு மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. கடந்த 31.5.2020-ம் தேதி 12.30 மணியளவில் மாஸ்க் அணிந்தபடி ஆட்டோவில் கறுப்பு நிற சட்டை அணிந்தபடி மர்ம மனிதர் ஒருவர் வந்துள்ளார். ஏடிஎம்மில் இருந்த காவலாளியிடம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் எனக்கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதனால் காவலாளியும் அந்த நபரைக் கண்காணிக்கவில்லை.

ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்கு சாவி மற்றும் ரகசிய நம்பர்கள் பயன்படுத்தப்படும். இந்த ஏடிஎம் இயந்திரத்தின் சாவி மற்றும் ரகசிய நம்பர்கள் அந்த வங்கியில் பணியாற்றும் உதவி மேலாளர்கள் 2 பேர், 3 ஊழியர்கள் என 5 பேருக்கு மட்டும் தெரியும். அதனால் இவர்களின் உதவியின்றி ஏடிஎம் இயந்திரத்தை திறந்து ரகசிய நம்பர்களைப் பயன்படுத்தி கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை
போலீஸ் அதிகாரி
ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளை
vikatan
`வீல்சேர் அம்மா... பாசக்கார மகன்...' - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

இந்தச் சமயத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர், அதிர்ச்சியடைந்தார். ஏடிஎம் மையத்துக்குள் சென்ற நபர், ஏடிஎம் இயந்திரத்தை சாவியின் உதவியோடு திறந்து பணத்தை அள்ளிக் கொண்டிருந்தார். உடனே ஏடிஎம் பணத்தை எடுக்கவந்த நபர், காவலாளியிடம் தகவலைத் தெரிவித்தார். காவலாளி வருவதற்குள் பணத்தை எடுத்த நபர், அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து காவலாளி, வங்கியின் மேலாளர் ராஜ்குமாருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வங்கி மேலாளர் ராஜ்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் வந்தனர். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பார்த்தபோது 8,61,900 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஏடிஎம்மில் 17,10,000 ரூபாய் 31-ம் தேதி நிரப்பப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் பதிவான கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பின்னர் ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையனின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் காட்சிகளும் ரகசிய நம்பர்களை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

`முதலில் உதவி செய்தேன்; பிசினஸ் நஷ்டமடைந்ததும் மனம் மாறினேன்!"- தொழிலதிபர் டு ஏடிஎம் கொள்ளையன்
சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

இந்தச்சம்பவத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் சாவி போட்டு திறந்ததோடு ரகசிய நம்பர்களையும் பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அது, வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியடையவைத்துள்ளது. ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் குறித்து வங்கி மேலாளர் ராஜ்குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்கு சாவி மற்றும் ரகசிய நம்பர்கள் பயன்படுத்தப்படும். இந்த ஏடிஎம் இயந்திரத்தின் சாவி மற்றும் ரகசிய நம்பர்கள் அந்த வங்கியில் பணியாற்றும் உதவி மேலாளர்கள் 2 பேர், 3 ஊழியர்கள் என 5 பேருக்கு மட்டும் தெரியும். அதனால் இவர்களின் உதவியின்றி ஏடிஎம் இயந்திரத்தை திறந்து ரகசிய நம்பர்களைப் பயன்படுத்தி கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏடிஎம் இயந்திரத்தின் ரகசிய நம்பர்களை வங்கி அதிகாரிகள் மாற்றாமல் இருந்துள்ளனர். வங்கியில் 17 லட்சம் ரூபாய் பணம் நிரப்பப்பட்ட தகவல் கிடைத்ததும் கொள்ளையன் ஏடிஎம் மையத்துக்கு வந்துள்ளான்.

மதுரவாயல் காவல் நிலையம்
மதுரவாயல் காவல் நிலையம்

இந்தச் சமயத்தில்தான் பணம் எடுக்க ஒருவர் வந்ததால் கையில் கிடைத்த 8,61,900 ரூபாயுடன் ஏடிஎம் இயந்திரத்தை ரகசிய நம்பர் மற்றும் சாவியின் உதவியோடு பூட்டிவிட்டு சென்றுள்ளான். மீதிப்பணம் ஏடிஎம் இயந்திரத்திலேயே இருந்தது. இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணியாற்றுவர் வயதானவர். அதனால் அவரிடம் கிருமி நாசினி தெளிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், அதற்கான கருவிகளை அவர் ஏடிஎம் மையத்துக்குள் கொண்டு செல்லவில்லை. அதையும் காவலாளி கவனிக்காமல் இருந்துள்ளார். வங்கி மேலாளர் தெரிவித்த தகவலின்படி வங்கியில் பணியாற்றும் அந்த 5 நபர்களிடம் விசாரித்துவருகிறோம். அவர்களின் செல்போன் அழைப்புகளையும் ஆய்வு செய்துவருகிறோம். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர், ஆட்டோவில் வந்துள்ளார். அதனால் ஆட்டோவின் பதிவு நம்பரைக் கொண்டும் விசாரித்துவருகிறோம். விரைவில் ஏடிஎம் கொள்ளையனைப் பிடித்துவிடுவோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு