Published:Updated:

சிறைக்குச் சென்ற கணவர்; மனைவியோடு பழகிய இளைஞர்; கொலைக்கு உடந்தையான நண்பர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலை வழக்கில் கைதான கமலக்கண்ணன்
கொலை வழக்கில் கைதான கமலக்கண்ணன்

சென்னையில் ஆட்டோ டிரைவரின் மனைவியோடு பழகிய இளைஞர், கொலை செய்யப்பட்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நன்மங்கலம், அருள்முருகன் நகர் பகுதியில் 25 வயது மதிக்கதக்க ஆண் சடலம் 18.10.2021-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜானகிராமன் என்பவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாகராஜ்
நாகராஜ்

பின்னர் இறந்து கிடந்தவர் யாரென்று போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரின் பெயர் விக்னேஷ் (20), சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இவர் வீடுகளுக்குத் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்தார். இவர் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பில் குடியிருந்தபோது செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட விக்னேஷ் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பிறகு தண்டையார்பேட்டையில் குடியிருக்காமல் சிட்லபாக்கத்தில் குடியிருந்தார்.

நாகராஜ், சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கமலக்கண்ணன் அவரின் நண்பர் சிவக்குமார் மூவருக்கும் மது அருந்த சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டு மூன்று பேரும் நண்பர்களாகினர். அதன்பிறகு மூன்று பேரும் சேர்ந்து அவ்வப்போது மது அருந்தி வந்தனர். இந்தச் சமயத்தில் ஆட்டோ டிரைவர், கமலக்கண்ணன், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் நடந்த தகராறில் குரோம்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் கமலக்கண்ணனின் மனைவி மாலினி, தனியாக வீட்டில் இருந்தார்.

சிவக்குமார்
சிவக்குமார்
ஒரே பெண்ணிடம் பழகிய இரு நண்பர்கள்; பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்ததால் கொலை; என்ன நடந்தது?

அப்போது விக்னேஷ், கமலக்கண்ணனின் வீட்டுக்குச் சென்று மாலினிக்கு உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். அப்போது மாலினி, தன்னுடைய கணவர் கமலக்கண்ணை சிறையில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு விக்னேஷிடம் கூறியிருக்கிறார். ஏற்கெனவே விக்னேஷ் சிறையில் இருந்ததால் அதற்கு பணம் செலவாகும் என்று மாலினியிடம் கூறியிருக்கிறார். விக்னேஷ், கேட்ட பணத்தை மாலினி கொடுத்திருக்கிறார். அதன்பிறகு மாலினியை அழைத்துக் கொண்டு விக்னேஷ், சிறைக்குச் சென்று கமலக்கண்ணனைச் சந்தித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி மாலினிக்கும் விக்னேஷுக்கும் ஏற்பட்ட நட்பால், நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அழைத்துச் சென்றிருக்கிறார். இந்தச் சமயத்தில் கமலக்கண்ணன், சிறையிலிருந்து வெளியில் வந்தார். அப்போதும் மாலினியும் விக்னேஷும் பழகி வந்தனர். இருவரின் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தைக் கண்ட கமலக்கண்ணன் மனைவி மாலினியைக் கண்டித்திருக்கிறார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகும் விக்னேஷ் கமலக்கண்ணன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

கொலை
கொலை

அதனால் விக்னேஷைக் கொலை செய்ய கமலக்கண்ணன் திட்டமிட்டார். இதையடுத்து கமலக்கண்ணன், தனது நண்பர்களான நாகராஜ், சிவக்குமார், சரத் ஆகியோரை அழைத்துக்கொண்டு 18-ம் தேதி விக்னேஷை நன்மங்கலம் பகுதிக்கு ஆட்டோவில் கடத்திச் சென்றார். அங்கு விக்னேஷைக் கத்தியால் தலை, கழுத்தில் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பினர். தலைமறைவாக இருந்த கமலக்கண்ணன், நாகராஜ், சிவக்குமார் மூன்று பேரை போலீஸார் கைது செய்து ஆட்டோ, கத்தி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு