Published:Updated:

சென்னை: தேர்வில் தோல்வியால் மகள் தற்கொலை.. அளவு கடந்த பாசத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!

 தற்கொலை
தற்கொலை ( Representational Image )

6 ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு தேர்வில் மகள் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த மனவருத்தத்திலிருந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்திருக்கிறார்.

சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் விநாயகம். ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி கௌரி (46). இந்தத் தம்பதியினருக்கு ராஜேஷ் என்ற மகனும் ராதிகா என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ் கார் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த விநாயகம் தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர் போலீஸார் விநாயகத்தின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விநாயகத்தின் தற்கொலை குறித்து அவரின் மனைவி கௌரி சில தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

கரூர்: விஷம், தூக்கு; நள்ளிரவில் இருவர் தற்கொலை! - திருமணம் தாண்டிய உறவு காரணமா?

திருவொற்றியூர் காவல் நிலையத்தில் விநாயகத்தின் மனைவி கௌரி கொடுத்த புகாரில், ``எங்களுடைய மகள் ராதிகா மீது என் கணவர் விநாயகம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அவள் பத்தாம் வகுப்பில் பெயிலாகி விட்டதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த மனவருத்தத்தில் இருந்த என் கணவர் விநாயகம் மதுவுக்கு அடிமையானார். இரவில் ராதிகாவின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு அழுதுகொண்டே இருப்பார். அப்போது அவருக்கு நான் ஆறுதல் கூறுவேன்.

தற்கொலை
தற்கொலை
Representational image

4.5.2021-ல் எங்கள் தெருவில் உள்ள கடைக்கு நான் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது விநாயகம் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரை நான் கூப்பிட்டேன். ஆனால் அவர் கவனிக்கவில்லை. கடைக்குச் சென்று விட்டு நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எனக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வீட்டுக்குச் சென்றேன். அப்போது படுக்கையறையில் புடவையால் தூக்கில் விநாயகம் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான் என்னுடைய மகனுக்கு போன் செய்தேன். அதன்பிறகு விநாயகத்தை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். அங்கு என் கணவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகள் இறந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை மனவருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு