Published:Updated:

சென்னை: ஒரிஜினலுக்கு பதில் போலி; தங்க நகைகளைத் திருடிய ஊழியர் - சிக்கியது எப்படி?

தங்க நகைகள்
தங்க நகைகள் ( Representational Image )

சென்னையில் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் மற்றும் அவரின் நண்பர்களை போலீஸார் கைதுசெய்து அவர்களிடமிருந்து 28 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சென்னை ஆவடி சி.டி.ஹெச் சாலையில் தங்க நகைகளுக்குக் கடன் வழங்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் ஜெயகர் என்பவர் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். 3.2.2021-ல் நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர் சதீஷ்குமாரிடம் 986.25 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தனித் தனி பார்சலாகப் போட்டு தி.நகரிலுள்ள தலைமை அலுவலகத்தில் கொடுக்கும்படி ஜெயகர் கூறினார். அதன்படி சதீஷ்குமாரும் தங்க நகை பார்சலை தி.நகர் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

தி.நகர் அலுவலகத்திலிருந்து தங்க நகைகள் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆவடி கிளையிலிருந்து அனுப்பட்ட 28.5 சவரன் தங்க நகைகள் போலி எனத் தெரியவந்தது. அது தொடர்பாக மேலாளர் ஜெயகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜெயகர், ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஊழியர் சதீஷ்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`போலி முகவரி; கவரிங் நகைகள்!' - அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை கூட்டுறவு வங்கி

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கொரட்டூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் தங்க நகைகளுக்குக் கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். சதீஷ்குமாருக்கு அறிமுகமானவர் ஷோபா. இவரின் நண்பர் ரஞ்சித் என்கிற கண்ணன். 28.5 சவரன் தங்க நகைகளுக்கு பதிலாக போலி நகைகளைத் தலைமை அலுவலகத்தில் சதீஷ்குமார் கொடுத்திருக்கிறார். ஒரிஜினல் நகைகளை ஷோபா மூலம் ரஞ்சித்திடம் கொடுத்துவைத்திருக்கிறார்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

இவர்கள் மூன்று பேரிடமிருந்து தங்க நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

வேலை பார்த்த இடத்திலேயே தங்க நகைகளுக்கு பதில் போலி நகைகளைவைத்த ஊழியரும் அவரின் நண்பர்களும் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு