Published:Updated:

சென்னை: 'ஜிம் மாஸ்டர், இளம்பெண் பேசும் வைரல் ஆடியோ?' - போலீஸ் விசாரணை?!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( (Representational Image) )

சென்னையில் ஊரடங்கின்போது ரகசியமாகச் செயல்பட்ட ஜிம்மில் பயிற்சிக்குவந்த இளம்பெண்ணிடம் மாஸ்டர் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஆன்லைனில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. மாஸ்டரும் இளம்பெண்ணும் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

கொரோனா ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் சென்னை பரங்கிமலை காவல் மாவட்டத்திலுள்ள ஓர் உடற்பயிற்சிக்கூடம் ரகசியமாகச் செயல்பட்டுவந்திருக்கிறது. அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் அனைவரையும் அனுமதிக்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உடற்பயிற்சிக் கூடத்தின் முன்பக்கத்தின் வாசல் பூட்டப்பட்டு பின்பக்கம் வழியாகவே பயிற்சிக்கு வந்தவர்கள் வந்திருக்கின்றனர்.

ஜிம்
ஜிம்

அரசின் உத்தரவை மீறி ரகசியமாகச் செயல்பட்ட உடற்பயிற்சிக்கூடத்தில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணிடம் ஜிம் மாஸ்டர் அநாகரிகமாக நடந்துகொண்டதாக ஆன்லைன் மூலம் பரங்கிமலை காவல் மாவட்ட உயரதிகாரிக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மாஸ்டரும் இளம்பெண்ணும் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

அந்த ஆடியோவில், ``ஹலோ மேடம், நான்தான் பேசுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் மாஸ்டர் பேசுவதாகத் தொடங்கும் ஆடியோவில் அந்தப் பெண், ``நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டாம். மனஉளைச்சலில் இருக்கிறேன். உங்களுடைய விளக்கம் எனக்குத் தேவையில்லை. நான் உங்களுடைய மனைவிக்கு மரியாதை கொடுத்துதான் அமைதியாக வந்துவிட்டேன்’’ என்பதாக அந்த ஆடியோ உள்ளது.

ஆடியோ
ஆடியோ
மாதிரிப் படம்

இதுகு றித்து பரங்கிமலை காவல் மாவட்ட போலீஸாரிடம் கேட்டதற்கு, பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த மாஸ்டர் பிரேம் என்பவர், போனில் இளம்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அந்த ஆடியோதான் தற்போது வேகமாகப் பரவிவருகிறது. சம்பந்தப்பட்ட மாஸ்டரிடமும் இளம்பெண்ணிடமும் விசாரித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு