Published:Updated:

சென்னை: கடந்தகால வாழ்க்கையால் திசைமாறிய பெண் தொழிலதிபர்!- ஆபாசப் படங்களால் கணவர் அதிர்ச்சி

பெண் தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை
பெண் தொழிலதிபர் பாலியல் வன்கொடுமை ( representational image )

சென்னையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர், தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை அலுவலகத்தில் பணியாற்றியவருடன் பகிர்ந்திருக்கிறார். அதைவைத்து மிரட்டியதால் பெண் தொழிலதிபரின் வாழ்க்கை திசை மாறியிருக்கிறது.

சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நானும் எனது கணவரும் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் தனியார் காப்பீட்டுச் சேவைகள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறோம். எங்கள் நிறுவனத்தில் ரத்தினக்குமார் என்பவர் 2015-ம் ஆண்டு முதல் சீனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்வாக வேலை பார்த்துவருகிறார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

நானும் ரத்தினக்குமாரும் பணிநிமித்தமாகப் பேசிவந்தோம். எனக்கும் என் கணவருக்கும் குடும்பப் பிரச்னை ஏற்படும்போது மன வருத்தத்தில் அலுவலகத்தில் இருப்பேன். அந்தச் சமயத்தில் எனக்கு ஆறுதல் சொல்வதுபோல ரத்தினக்குமார் நடித்து என் மீது அக்கறை கொண்டவராக இருப்பதுபோலவும், என் மீது அன்பு செலுத்துபவர்போலவும் என்னை ஏமாற்றி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் ரத்தினக்குமார் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் என்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அவரிடம் தெரிவித்தேன். அப்போது ஒருவருடன் நான் பழகிய தகவலைக் கூறினேன். நான் கூறிய விஷயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு என்னைக் காதலிப்பதுபோல வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்ய வேண்டும் என்றும், பல தடவை என்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறும் கட்டாயப்படுத்தினார் ரத்தினக்குமார்.

சென்னை: ஒரே நேரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - புகாரால் சிக்கிய ரவுடி முரளி

நான் முடியாது என்று மறுக்கவே, அவ்வாறு அனுப்பவில்லையென்றால், என் கணவரிடம் என்னுடைய கடந்தகால வாழ்க்கையைத் தெரிவித்துவிடுவேன் என்று என்னை ரத்தினக்குமார் மிரட்டிவந்தார். நானும் என் கணவருக்கு விஷயம் தெரிந்தால் குடும்ப வாழ்க்கை சீரழிந்துவிடும் என்ற பயத்தால் ரத்தினக்குமார் கூறியபடி வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்து, புகைப்படங்களையும் அனுப்பினேன். அதுமட்டுமன்றி என்னோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். உடனே அவர், நான் அனுப்பிய புகைப்படங்களை இணையதளத்தில் ஏற்றிவிடுவேன் என்று மிரட்டி, பலமுறை என்னுடைய வீட்டிலும், பல இடங்களிலும் என்னுடன் நெருக்கமாக இருந்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

இந்தச் சமயத்தில் ரத்தினக்குமார், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் தன்னிடம் இருக்கும் என்னுடைய ஆபாசமான புகைப்படங்களை அழித்துவிடுவதாகவும் கூறினார். ஆனால் திடீரென்று என்னுடைய முன்னாள் காதலருடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று என்னை நிர்பந்தப்படுத்தியதால் மேற்படி விஷயங்களை என் கணவரிடம் தெரிவித்தேன். இதையடுத்து என் கணவர், ரத்தினக்குமாரை அழைத்து விசாரணை செய்ததில், என்னை மிரட்டி என்னிடமிருந்து பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இமெயிலில் வைத்திருக்கிறார் என்பதையறிந்து நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

என்னிடமும் என் கணவரிடமும் ரத்தினக்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டு, என்னுடைய புகைப்படங்களை அழித்துவிடுவதாகக் கூறிவிட்டு சென்றவர், என் கணவரைத் தொடர்புகொண்டு மிரட்டிவருகிறார். பலமுறை என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அதை வீடியோவாகவும் எடுத்துவைத்திருக்கிறார். அதைப் பலருக்கு அனுப்பியும்வைத்திருக்கிறார். இன்னும் எத்தனை பேருக்கு என்னுடைய படங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், ரத்தினக்குமார் என்னை மட்டுமன்றி, என் நிறுவனத்தில் பணிபுரிந்த சில பெண்களுக்கும் இதே போன்று பாலியல் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார்.

பாலியல் 
தொல்லை
பாலியல் தொல்லை
representational image

ரத்தினக்குமாரை அழைத்து விசாரித்தால், இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார் என்ற உண்மை தெரியவரும். எனவே, ரத்தினக்குமார் மீதும் அவரின் அடியாள்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் ஐ.பி.சி 354, 354 பி, 354 சி, 376, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெண் தொழிலதிபர், குற்றம் சுமத்திய ரத்தினக்குமாரிடம் போலீஸார் விசாரித்தால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்த கட்டுரைக்கு