Published:Updated:

சென்னை: ஹவுஸ் ஓனரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.12 லட்சத்தை திருடிய கல்லூரி மாணவி! - சிக்கியது எப்படி?

கைது

சென்னையில் மகள் போல கருதிய கல்லூரி மாணவி, ஹவுஸ் ஓனரின் வங்கி கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 12 லட்சம் ரூபாய் வரை திருடி அதை தன்னுடைய ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

சென்னை: ஹவுஸ் ஓனரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.12 லட்சத்தை திருடிய கல்லூரி மாணவி! - சிக்கியது எப்படி?

சென்னையில் மகள் போல கருதிய கல்லூரி மாணவி, ஹவுஸ் ஓனரின் வங்கி கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 12 லட்சம் ரூபாய் வரை திருடி அதை தன்னுடைய ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

Published:Updated:
கைது

சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் (58). இவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் பிஎஸ்என்எல்லில் டெலிகாம் டெக்னீஷியனாக கடந்த 29 ஆண்டுகள் பணியாற்றினேன். தற்சமயம், விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறேன். எங்கள் வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக வளர்மதி என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரின் மகள் சுமித்ரா சிறுவயது முதல் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம்.

கல்லூரி மாணவி சுமித்ரா
கல்லூரி மாணவி சுமித்ரா

அப்போது அவள், என்னுடைய செல்போன், என் மனைவி ஷீலாவின் செல்போன் ஆகியவற்றை சுமித்ரா பயன்படுத்துவது வழக்கம். நான் கடந்த 3.3.2022-ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்குச் சென்று வீடு கட்டுவதற்காக எனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்கான சென்றேன். அப்போது எனது வங்கி கணக்கிலிருந்து 20.11.2011-ம் தேதி முதல் 28.2.2022-ம் தேதி வரை சுமார் 11.90 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக வங்கியின் கேஷியர் தெரிவித்தார். பின்னர் கேஷியர், பணம் எடுத்தற்கான பேங்க் ஸ்டேட்மெண்ட்டையும் என்னிடம் கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பணம் எடுக்கப்பட்ட தகவலை மனைவியிடம் தெரிவித்தேன். எனது வங்கி கணக்கிலிருந்து வளர்மதியின் மகள் சுமித்ராதான் பணத்தை எடுத்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் கடந்த 26.3.2022-ம் தேதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த அகஸ்டின், ஷீலா தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அதனால் வீட்டு வேலை செய்து வந்த வளர்மதியின் மகள் சுமித்ராவை தங்களின் மகள் போல அகஸ்டினும் ஷீலாவும் கருதினர்.

வங்கி விவரம்
வங்கி விவரம்

வேலைப்பார்த்து சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அகஸ்டின் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்தார். அதை வைத்து அரும்பாக்கத்தில் வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். அதற்காக வங்கியில் பணத்தை எடுக்கச் சென்றபோது 12 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்ட தகவலைக் கேட்டு அகஸ்டின் அதிர்ச்சியடைந்தார். அதுகுறித்து விசாரித்தபோது ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதை வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். அப்போது ஆன் லைன் மூலம் பணத்தை எப்படி அனுப்புவது தனக்குத் தெரியாது என அகஸ்டின் தெரிவித்தார். அதன்பிறகு உங்கள் செல்போனை வேறு யாராவது பயன்படுத்துவார்களா என வங்கி ஊழியர்கள் அகஸ்டின் கேட்டபோதுதான் சுமித்ரா மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் சுமித்ரா மீது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அகஸ்டின் புகாரளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு அகஸ்டின் வங்கி கணக்கிலிருந்து எங்கெல்லாம் பணம் அனுப்பப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை சேகரித்தோம். அப்போது சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் இரண்டு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தது. மேலும் புதுச்சேரி, கோவா உள்ளிட்ட இடங்களில் அந்தப் பணத்தை சதீஷ்குமார் செலவழித்த தகவலும் தெரியவந்தது. உடனடியாக சதீஷ்குமார் குறித்து விசாரித்தபோது அவர் சுமித்ராவின் ஆண் நண்பர் என்று தெரியவந்தது. சதீஷ்குமாரும் சுமித்ராவும் தலைமறைவாகியிருந்தால் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்தோம். சுமித்ரா, சதீஷ்குமார் ஆகியோர் பயன்படுத்தி வரும் செல்போன்களின் சிக்னல்கள் பெங்களூரு, கேரளா, மும்பை என காட்டி வந்தது.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

அதனால் இருவரையும் சுமித்ராவின் அம்மா வளர்மதி மூலம் பிடிக்க திட்டமிட்டோம். நாங்கள் விரித்த வலையில் வளர்மதியைச் சந்திக்க சுமித்ரா, சதீஷ்குமாருடன் சென்னை வந்தார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்த இருவரையும் சுற்றி வளைத்தோம். அவர்களிடமிருந்து நான்கு புதிய செல்போன்கள் 79 ஆயிரம் ரொக்கப்பணம் 2.5 சவரன் தங்கச் செயின், புதிய பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். ஹவுஸ் ஓனர் அகஸ்டினின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எப்படி திருடினாய் என்று சுமித்ராவிடம் விசாரித்தபோது முழு தகவலையும் அவர் தெரிவித்தார்.

அகஸ்டினும் ஷீலாவும் சுமித்ரா மீது ரொம்பவே பாசமாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் அவள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். அகஸ்டின் வேலைப்பார்த்த இடத்திலிருந்து கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்தார். அந்த விவரம் சுமித்ராவுக்கு தெரிந்ததும் அந்தப் பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். அகஸ்டினுக்கு ஸ்மார்ட் போன் குறித்து போதிய அறிவு இல்லை. அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திய சுமித்ரா, அகஸ்டினின் செல்போன் மூலம் அவரின் வங்கி கணக்கிலிருந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மூலம் எடுக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் பணத்தை சுமித்ராவின் பாய் ஃப்ரெண்ட் சதீஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அந்தப் பணத்தை ஆடம்பரமாக செலவழித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சுமித்ரா, சென்னையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism