Published:Updated:

43 வயது பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவன் கைது!

குற்றம்

சென்னையில் தனியாக வசித்துவந்த 43 வயது பெண்ணை, கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

43 வயது பெண் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை - கல்லூரி மாணவன் கைது!

சென்னையில் தனியாக வசித்துவந்த 43 வயது பெண்ணை, கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
குற்றம்

சென்னை அடையாறு பகுதியில் கணவனை இழந்த 43 வயது பெண் ஒருவர் தனியாக வீடு எடுத்து வசித்துவருகிறார். இவர், திருவல்லிக்கேணி பகுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி அந்தப் பெண் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வீட்டின் வெளியே வழியை மறித்தபடி நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண், ``நீங்கள் யார்?" என அந்த இளைஞரைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அவர் கேட்ட மாத்திரத்தில், அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார்.

அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம்
அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம்
Durairaj G

வீட்டுக்குள் நுழைந்த அந்த இளைஞர் கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணை ஆபாசமாகப் படமெடுத்துக்கொண்டு, அவரின் செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்புகொண்ட அந்த இளைஞர், `நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பெண், நடந்த சம்பவத்தை தன் மகளிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அழைப்பு வந்த செல்போன் எண்ணைக்கொண்டு அந்த நபரைத் தேடும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட நபரை மெரினா கடற்கரைப் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கைது
கைது

அவரிடம் நடத்திய விசாரணையில், அவ்ர் திருவல்லிக்கேணி பைண்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் (20) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருவதும் தெரியவந்தது. அதையடுத்து, இளைஞர்மீது வழக்கு பதிவுசெய்த அடையாறு அனைத்து மகளிர் போலீஸார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism