Published:Updated:

`ஐ மிஸ் யூ டா..!' - உடல்பருமனால் சென்னைக் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

உடல் பருமன் காரணமாகவும் தொடர்ந்து ஒரே வகுப்பு படித்த விரக்தியிலும் சென்னைக் கல்லூரி மாணவி, நண்பனுக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு விபரீத முடிவை எடுத்திருக்கிறார்.

சென்னைக் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்பவர் கணேஷ்(48). இவரின் மனைவி காயத்ரி(43). இந்தத் தம்பதிக்கு விஸ்வநாதன் என்ற மகனும் பூஜா (20) என்ற மகளும் உள்ளனர். கணேஷ், விஸ்வநாதன் ஆகிய இருவரும் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். காயத்ரி, குன்றத்தூரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். பூஜா, தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.

representational image
representational image

சம்பவத்தன்று (18.2.2020) காயத்ரி வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். பூஜா, கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அப்போது, தாம்பரத்தில் உள்ள தனது நண்பருக்கு செல்போனில் பேசிய பூஜா, `இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், ஐ மிஸ் யூ டா' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உடனடியாக அந்த நண்பர் பூஜாவின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுவிட்ச் ஆஃப் எனப் பதில் வந்துள்ளது. இதையடுத்து பூஜாவின் அம்மாவுக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து பூஜாவின் நண்பர் தாம்பரத்திலிருந்து அவசர அவரசமாகக் குன்றத்தூருக்கு வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பூஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்க வேண்டிய பூஜா, சில காரணங்களுக்காக முதலாமாண்டு படித்துவந்தார். அதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார்.
பூஜாவின் அம்மா காயத்ரி

இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பூஜாவைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸார், பூஜாவின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் பூஜா, சிறுவயதிலிருந்து டான்ஸ் மீது ஆர்வமுள்ளவர். அதனால் டான்ஸ் ஆட அவர் கற்றுக் கொண்டிருந்தார். இந்தநிலையில் சில வருடங்களாக அவரின் உடல் பருமன் அதிகமானது. அதனால் அவரால் டான்ஸ் ஆட முடியவில்லை. அதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் கடந்த சில தினங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

Vikatan

ஆனால், பூஜாவின் அம்மா காயத்ரி கொடுத்த புகாரில் உடல் பருமன் குறித்த தகவல் இல்லை. மாறாக அந்தப் புகாரில் ``கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்க வேண்டிய பூஜா, சில காரணங்களுக்காக முதலாமாண்டு படித்துவந்தார். அதனால் அவர் மனஉளைச்சலில் இருந்தார். கல்லூரிக்கும் செல்லாமல் இருந்த அவர், 18-ம் தேதி தாம்பரத்தில் எங்களுக்குத் தெரிந்த பையன் கார்த்திகேயன் மணிகண்டனுக்கு போனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு