Published:Updated:

சென்னை: `காதலா... தந்தை பாசமா?' - விடுதி மாடியிலிருந்து குதித்த மாணவி

காதல் ஜோடி
காதல் ஜோடி ( மாதிரி படம் )

விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவி திவ்யா, நீண்ட நேரம் ஆண் நண்பரிடம் போனில் பேசிவந்துள்ளார். அதைத் தந்தை கண்டித்ததும் விடுதிக்குச் சென்றிருக்கிறார்.

சென்னை ஆவடி, ஸ்ரீதேவிநகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் இளங்குமரன் (45). இவர், ஆவடியில் உள்ள ஹெச்.வி.எஃப்பில் பிட்டராகப் பணியாற்றிவருகிறார். இவரின் மனைவி சாந்தகுமாரி (43). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தம்பதியின் ஒரே மகள் திவ்யா. இவர் சென்னை போரூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இளங்குமரனுக்கும் சாந்தகுமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் சாந்தகுமாரி குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இளங்குமரனும் அவரின் மகளும் மட்டும் ஆவடியில் தங்கியிருந்தனர்.

காதல்
காதல்
representational image

இந்தநிலையில் திவ்யா, தனியாக இருக்க விரும்பியுள்ளார். அதனால் அவரை ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உள்ள பெண்கள் விடுதியில் இளங்குமரன் சேர்த்துள்ளார். அங்கு தங்கியிருந்த திவ்யா, அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். ஊரடங்கையொட்டி கடந்த 18.6.2020-ம் தேதி விடுதியிலிருந்து திவ்யா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் ஜூலை 1-ம் தேதி வீட்டிலிருந்து விடுதிக்குச் சென்றுள்ளார். வீட்டிலிருந்த நாள்களில் திவ்யா, செல்போனில் ஆண் நண்பருடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்த இளங்குமரன், மகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

` சரி அப்பா, நீங்கள் சொல்வதைப் போலவே நடக்கிறேன்' என்று திவ்யா கூறியுள்ளார். 2-ம் தேதி விடுதியிலிருந்து இளங்குமரனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய விடுதி நிர்வாகி, `உங்கள் மகள் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டாள், உடனே புறப்பட்டு மருத்துவமனைக்கு வாருங்கள்' என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளங்குமரன், மகளை அனுமதித்திருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image
உயர் அதிகாரியின் அழைப்பு: உயிரிழந்த பி.டி.ஓ? - கொரோனா அதிர்ச்சியில் திருவள்ளூர் தி.மு.க

மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலை மோசமானதும் வேறோரு பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு திவ்யாவை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து ஆவடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சோனைராஜன் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி திவ்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து திவ்யாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இளங்குமரன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `என் மகள் தான் நேசித்து வந்த நபரை மறக்க முடியாததாலும் என்மீதுள்ள பாசத்தால் அப்பாவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்ததாலும் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதனால்தான் இந்த விபரீத முடிவை எடுத்து மாடியிலிருந்து குதித்து இறந்துவிட்டாள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

`தாவரவியல் மாணவி தற்கொலை; 3 பக்கக் கடிதம்!' - பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை

ஆவடி போலீஸார் கூறுகையில், ``மாணவி திவ்யாவுடன் போனில் பேசிய நபரிடம் இளங்குமரன் பேசக்கூடாது என்று கண்டித்ததால் அவரும் பேசாமல் இருந்துள்ளார். தனியாக விடுதியில் இருந்த அவர், 3-வது மாடிக்குச் சென்று குதித்து தற்கொலை செய்துள்ளார். அவரின் விடுதி அறைகளை ஆய்வு செய்தபோது எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. அவரின் செல்போன் நம்பர் கால் ஹிஸ்ட்ரியை ஆய்வு செய்தபோது ஒரு குறிப்பிட்ட நம்பருக்கு நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். அதனால் அவரிடம் திவ்யா மரணம் குறித்து விசாரணை நடத்தவுள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு