Published:Updated:

`2 வயதில் அம்மா; 18 வயதில் அக்கா!' - இன்ஜினீயர் வாழ்க்கையில் தொடரும் சோகம்

செல்போன்
செல்போன்

2 வயதில் அம்மாவை இழந்த சுரேஷ் கிருஷ்ணா, தன்னுடைய 18-வது வயதில் தனக்கு ஆதரவாக இருந்த அக்காவையும் இழந்து தவித்துவருகிறார்.

இன்ஜினீயரிங் மாணவன்

சென்னை கீழ்கட்டளை, துரைராஜ்நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்கிருஷ்ணா (18). இன்ஜினீயரிங் படித்து வருகிறார். இவரின் அக்காள் மதுமிதா (21). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்தார். இவர்களின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் உள்ள ஸ்ரீராமநாதபுரம் கிராமம். சுரேஷ் கிருஷ்ணாவுக்கு 2-வயது இருக்கும்போதே அவரின் அம்மா திடீரென இறந்துவிட்டார்.

குடும்பம்
குடும்பம்

அதன்பிறகு அவரின் தந்தை ராஜேந்திரன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அப்பாவும் அம்மாவும் இல்லை என்ற நிலையில் பாட்டி, தாத்தா அரவணைப்பில் மதுமிதாவும் சுரேஷ் கிருஷ்ணாவும் வளர்ந்துள்ளனர். தற்போது சென்னையில் உள்ள தாய்மாமன் வீட்டில் இருவரும் தங்கி கல்லூரிகளில் படித்துவருகின்றனர்.

செல்போன் கேம்

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். மதுமிதாவுக்கு போனில் கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதனால் எப்போதும் அவர் செல்போனில் கேம்ஸ் மற்றும் சேட்டிங் செய்துகொண்டிருந்துள்ளார். மேலும் அடிக்கடி போனில் பேசியும் உள்ளார். அதைக் கவனித்த தாய்மாமன், மாணவி மதுமிதாவைக் கண்டித்துள்ளார். நீ தாயில்லாத பொண்ணு, அதனால் கவனமாக இருக்க வேண்டும். நீ நல்ல நிலைக்குச் சென்றால்தான் உன் தம்பியின் லைஃப்பும் செட்டிலாகும் என்று மதுமிதாவுக்குத் தாய்மாமன் அறிவுரை கூறியுள்ளார். அதன்பிறகும் மதுமிதா செல்போனிலேயே நேரத்தைச் செலவழித்துவந்துள்ளார்.

என்னுடைய 2 வயதில் அம்மாவை இழந்தேன். அம்மாவின் முகம்கூட எனக்குச் சரியான ஞாபகம் இல்லை. எனக்கு இன்னொரு அம்மாவாக என்னுடைய அக்கா மதுமிதா இருந்தார். அவர் என்மீது அன்பாக இருப்பாள்
சுரேஷ்கிருஷ்ணா
செல்போன்
செல்போன்
செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கணவரின் சடலம் - அதிர்ச்சியில் உறைந்த மனைவி

இதையடுத்து, மதுமிதாவின் செல்போனை அவரின் தாய்மாமன் வாங்கிக் வைத்துக் கொண்டார். செல்போன் இல்லாததால் மதுமிதா மனவேதனையிலிருந்துள்ளார். மேலும் சகஜமாக யாருடனும் பேசாமல் இருந்துவந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 26-ம் தேதி குளிப்பதற்காக அவர் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை. மேலும் குளிக்கும் சத்தமும் கேட்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த மதுமிதாவின் தாய்மாமன், மற்றும் அவரின் தம்பி சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கதவைத் தட்டியுள்ளனர். அப்போது மதுமிதாவிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை.

தற்கொலை

அதனால் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது குளியலறையில் மதுமிதா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுரேஷ் கிருஷ்ணாவும் தாய்மாமனும் மதுமிதாவை மீட்டனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மதுமிதாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மதுமிதாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்
`நட்பில் இருந்த பெண் இறந்ததால் விரக்தி' -சோகத்தில் முடிந்த சென்னை இளைஞரின் வாழ்க்கை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கல்லூரி மாணவி மதுமிதாவுக்கு ஃப்ரெண்ட்ஸ்கள் இருந்துள்ளனர். அவர்களுடன் சேட்டிங் செய்வதும், கேம்ஸ் விளையாடுவதை மதுமிதா வாடிக்கையாக வைத்துள்ளார். அதைக் கண்டித்ததும் மதுமிதா, குளியலறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்" என்றனர்.

சுரேஷ்கிருஷ்ணா போலீஸாரிடம், `என்னுடைய 2 வயதில் அம்மாவை இழந்தேன். அம்மாவின் முகம்கூட எனக்கு சரியான ஞாபகம் இல்லை. எனக்கு இன்னொரு அம்மாவாக என்னுடைய அக்கா மதுமிதா இருந்தார். அவர் என்மீது அன்பாக இருப்பாள். செல்போன் மோகத்தால் என்னுடைய 18 வயதில் அக்கா இப்படியொரு முடிவை எடுப்பாள் என்று நான் நினைக்கவில்லை' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். அதைக்கேட்ட போலீஸாரும் சுரேஷ் கிருஷ்ணாவின் உறவினர்கள், ஃப்ரெண்ட்ஸ்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு