Published:Updated:

சென்னை: `அந்த ஆடியோ உண்மை கிடையாது’ - உதவி இன்ஜினீயர் விவகாரத்தில் கல்லூரி மாணவி

மாநகராட்சி இன்ஜினீயரும் மாணவியும் பேசிய ஆடியோ
மாநகராட்சி இன்ஜினீயரும் மாணவியும் பேசிய ஆடியோ

` மாநகராட்சி உதவி இன்ஜினீயரும் நானும் பேசிய ஆடியோவை என் செல்போனிலிருந்து திருடி அதை எடிட்டிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டதால் நடைபிணமாக நான் வாழ்கிறேன்' என்று கல்லூரி மாணவி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர், கொரோனா தடுப்புப் பணிக்கு வந்த கல்லூரி மாணவியிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனப் பேசும் ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி, இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் ததடுப்புப் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``கொரோனா தொற்று காரணமாக நான் கல்லூரிக்குச் செல்லவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ பெண் களப்பணியாளர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். பின்னர் அந்த வேலையில் சேர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

இணையதளத்தில் வரும் ஆடியோ உண்மை கிடையாது. அதை வைத்து ஒரு பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அண்ணன் தங்கச்சி மாறிதான் பழகிவருகிறோம்.
கல்லூரி மாணவி
இன்ஜினீயர் ஆடியோ
இன்ஜினீயர் ஆடியோ
மாதிரிப் படம்

இந்தப் பணிக்கு சென்னை மாநகராட்சியில் உதவி இன்ஜினீயராக இருக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நான் தினமும் விழிப்புணர்வு பணிக்கு வரும்போது எனது குடும்ப ஏழ்மை சூழ்நிலையை அறிந்த இன்ஜினீயர் என் மீது அக்கறை கொண்டு பேசுவார். பின்னர் அவர், என்னுடைய மேற்படிப்புக்கு உதவி செய்வதாக செல்போனிலும் நேரிலும் கூறி வந்தார். அவர் ஒருபோதும் தவறான எண்ணத்தில் என்னிடம் பழகியதும் இல்லை. நானும் இன்ஜினீயரும் பேசிய செல்போன் உரையாடல்களை எனது அனுமதியின்றி எனக்குத் தெரியாமல் யாரோ என் செல்போனிலிருந்து திருடி அதைப் பார்வேர்டு செய்து அதை எடிட்டிங் செய்து சித்திரித்து சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டுவிட்டனர்.

என் எதிர்கால வாழ்க்கையைக் கேவலப்படுத்தியதால் பொது மக்கள் மத்தியில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறேன். நான் சென்னை மாநகராட்சி அதிகாரியிடமும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஜினீயர் மீது எந்தவித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் ஒருபோதும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இன்ஜினீயரை பழிவாங்க யாரோ என்னை கேவலப்பத்தி பகடைக்காயாய் பயன்படுத்தி வருவதுதான் உண்மை.

வாட்ஸ் அப் ஆடியோ
வாட்ஸ் அப் ஆடியோ

ஆகவே நான் இன்ஜினீயர் மீது எந்தவித வாய்மொழி, எழுத்து மூல புகாரையும் யாரிடமும் குறிப்பாக எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கவில்லை. ஆனால், செல்போன் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை செய்தார். நான் நடந்த உண்மைகளைக் கூறி இன்ஜினீயர் நல்லவர், என் மீது அக்கறை கொண்ட மனிதர். எனக்கு படிப்பு சம்பந்தமான நல்ல ஆலோசனைகளையும் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனைகளையும் சொல்லி வழிகாட்டியாக இருப்பவர். என்னிடம் அவர் ஒருபோதும் தவறாகப் பழகியதில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல ஆண் நண்பராவார்.

விழிப்புணர்வு பணியில் உள்ள தொடர்பு மட்டுமே எங்களுக்குள் உண்டு வேறு எந்தவித தவறான உறவும் கிடையாது. மேற்கூறியவற்றை எனது வாக்குமூலமாக ஏற்று எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலைய போலீஸாரோ, வேறு யாரும் இன்ஜினீயர் மீது பொய் வழக்கு போடாமலும் எனது எதிர்கால நலன்கருதி பாதுகாப்பு ஏற்படுத்தித் தருமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த வாக்குமூலத்தை யாருடைய துன்புறுத்தலும் தூண்டுதலுமின்றி என் சுயநினைவுடன் சுயவிருப்பத்துடன் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்போன் ஆடியோ
செல்போன் ஆடியோ
சென்னை: `புகாரை ஏன் வாபஸ் பெற்றேன்?’ -உதவி இன்ஜினீயர் விவகாரத்தில் கல்லூரி மாணவி விளக்கம்

இதையடுத்து கல்லூரி மாணவி நமக்கு ஒரு ஆடியோ ஒன்றையும் அனுப்பி வைத்தார். அதில், `இணையதளத்தில் வரும் ஆடியோ உண்மை கிடையாது. அதை வைத்து ஒரு பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அண்ணன் தங்கச்சி மாறிதான் பழகி வருகிறோம். அந்த மாதிரி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இதைப்பற்றி பேச வேண்டாம். இத்தோடு அதை முடித்துக்கொள்வோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு