Published:Updated:

சென்னை: அண்ணனுக்கு பதில் தம்பி? - திருமண நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் கொலை

கொலை செய்யப்பட்ட அபிஷேக்
கொலை செய்யப்பட்ட அபிஷேக்

திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த கல்லூரி மாணவனை மர்மக் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை, தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (48). இவரின் மனைவி சுசீலா (40). இந்தத் தம்பதியினருக்கு ஜோசப்ராஜ் (23), அபி என்கிற அபிஷேக் (20) என இரண்டு மகன்கள். அபிஷேக், பல்லாவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாமாண்டு படித்துவந்தார். கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், வீட்டிலேயே இருந்தார். கடந்த சில தினங்களாக ஒரகடத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் அபிஷேக் வேலைக்குச் சென்றார்.

திருமணம்
திருமணம்
representational image

இந்தநிலையில், அவருடன் கல்லூரியில் படித்த தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அபிஷேக், நடுவீரப்பட்டுவை அடுத்த தர்காஸ் பகுதிக்குச் சென்றார். நிகழ்ச்சி முடிந்து அவர் வீடு திரும்ப வெளியில் வந்தார். அப்போது இரண்டு பைக்குகளில் ஐந்து பேர் கொண்ட கும்பல் அபிஷேக்கைப் பின்தொடர்ந்தது. பின்னர் அந்தக் கும்பல் அபிஷேக்கைச் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அபிஷேக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருவள்ளூர்: காரில் வந்த 8 பேர் கும்பல் - நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

இந்தக் கொலை குறித்து சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அபிஷேக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அபிஷேக்கைக் கொலை செய்தவர்கள் யார் எனப் போலீஸார் விசாரித்துவருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொலை
கொலை
representational image
திருவள்ளூர்: காரில் வந்த 8 பேர் கும்பல் - நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``அபிஷேக்கின் அண்ணன் ஜோசப்ராஜ் மீது காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் சோமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் இரண்டு கும்பல் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஜோசப்ராஜ் கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜோசப்ராஜை பழிவாங்கத் திட்டமிட்ட கும்பல்தான் அவருக்கு பதிலாக அபிஷேக்கைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அபிஷேக்கைக் கொலை செய்தவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு