Published:Updated:

என் மனைவியோடு ஜாலியாக இருக்கலாம்! - ஆசைகாட்டி லட்சங்களை சுருட்டிய இன்ஜினீயர்

நிம்மல் - கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
நிம்மல் - கிருத்திகா

ஜூன் 27-ம் தேதி குமாருக்குப் பிறந்தநாள். அவருக்கு போன் போட்டு பேசிய கிருத்திகா, ‘வீட்டுக்கு வாங்க... உங்களுக்கு பார்ட்டி தர்றேன்’ என்று நைசாகப் பேசியிருக்கிறார்.

என் மனைவியோடு ஜாலியாக இருக்கலாம்! - ஆசைகாட்டி லட்சங்களை சுருட்டிய இன்ஜினீயர்

ஜூன் 27-ம் தேதி குமாருக்குப் பிறந்தநாள். அவருக்கு போன் போட்டு பேசிய கிருத்திகா, ‘வீட்டுக்கு வாங்க... உங்களுக்கு பார்ட்டி தர்றேன்’ என்று நைசாகப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
நிம்மல் - கிருத்திகா
பிரீமியம் ஸ்டோரி
நிம்மல் - கிருத்திகா

“இப்படியும் நடக்குமா?!” என்கிறரீதியில் அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. ஏ.டி.எம்-ல் நூதன திருட்டு தொடங்கி லாட்டரியில் 100 கோடி ரூபாய் பரிசு என்று வரும் மெசேஜ்கள் வரை எத்தனையோ விசித்திரமான குற்றங்களைக் கேள்விப்படுகிறோம். ஆனால், ‘‘எனக்கு அழகான மனைவி இருக்கிறார். அவளோடு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’’ என்று ஆசைகாட்டிய இன்ஜினீயர் நிம்மல் ஜெமினி கண்ணன், கஸ்டமர்களை வீட்டுக்கே வரவழைத்து மனைவி மூலம் அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றிவந்திருக்கிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இந்தத் தம்பதியரின் வலையில் வீழ்ந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை!

அதிகாலை அலறல்!

ஜூன் 29-ம் தேதி அதிகாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர், துரைப்பாக்கம் சக்தி நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து யாரோ அலறுவதுபோல சத்தம் கேட்பதாகக் கூறினார். அரை மணி நேரத்தில் அங்கு சென்ற போலீஸ் டீம், அலறல் சத்தம் வந்த வீட்டைக் கண்டுபிடித்தது. வீடு முன்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கவே, பால்கனி வழியாக போலீஸார் உள்ளே சென்றார்கள். உடல் முழுவதும் கயிறு, கம்பி, டேப் என்று கன்னாபின்னாவென கட்டப்பட்டிருந்தார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர். அவரை அங்கிருந்து மீட்ட போலீஸார், மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவரிடம் விசாரித்தார்கள்... “என் பெயர் குமார். சினிமா ஃபைனான்ஸ் நிறுவனம் நடத்திவருகிறேன். என்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த நிம்மல், அவரின் மனைவி கிருத்திகா, பெரம்பூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், துணை நடிகர் ஸ்டீபன் ஆகியோர் கட்டிப்போட்டார்கள்” என்றார் அழுதபடி.

செல்போன் சிக்னல் மூலம் நிம்மல் மற்றும் ஹரிகிருஷ்ணனின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, இந்த விவகாரத்தில் குமார் மீதும் தவறு இருப்பது தெரிந்தது. அதையடுத்து, நிம்மல் கொடுத்த புகாரில் குமாரையும், குமார் அளித்த புகாரில் நிம்மல், ஹரிகிருஷ்ணன் ஆகியோரையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் இந்த வழக்கில் தலையைக் கிறுகிறுக்கவைக்கும் விவகாரங்கள் வெளிவந்திருக்கின்றன.

 என் மனைவியோடு ஜாலியாக இருக்கலாம்! - ஆசைகாட்டி லட்சங்களை சுருட்டிய இன்ஜினீயர்

ஆன்லைனில் விளம்பரம்!

துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார். ‘‘துரைப்பாக்கம் சக்தி நகரில் குடியிருந்தவர் நிம்மல். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர், கிருத்திகா என்ற பெண்ணுடன் வாழ்ந்துவருகிறார். இவர் ஆன்லைனில் `True friends genuine relationship with benefit’ என்ற விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்து, ஓய்வுபெற்ற இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரியான ஹரிகிருஷ்ணன் இவர்களை போனில் தொடர்புகொண்டிருக்கிறார். அவரிடம் நிம்மல், ‘எனக்கு அழகான மனைவி இருக்கிறாள். அவளோடு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று பேசியிருக்கிறார். அதற்குச் சம்மதித்த ஹரிகிருஷ்ணனும் அடிக்கடி நிம்மலின் வீட்டுக்குச் சென்று, கிருத்திகாவுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இப்படியே அந்தத் தம்பதி ஹரிகிருஷ்ணனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 12 லட்சம் ரூபாய் வரை ‘கட்டணமாக’வும் ‘கைமாத்தாக’வும் கறந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஹரிகிருஷ்ணன் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அந்தத் தம்பதியர் பணத்தைக் கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், தனக்குத் தெரிந்த சினிமா ஃபைனான்ஸியர் குமாரிடம், நிம்மலிடமிருந்து பணத்தை வாங்கித் தரும்படி கூறி, ஓரிரு லட்சங்களை சர்வீஸ் சார்ஜாகக் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, ஒரு கும்பலுடன் நிம்மல் வீட்டுக்குச் சென்ற குமார் தம்பதியரிடமிருந்து நகை, கார், பைக் ஆகியவற்றைப் பறித்துச் சென்றிருக்கிறார். ஆனால், அதை ஹரிகிருஷ்ணனிடமும் குமார் கொடுக்கவில்லை. இதில் ஏமாற்றமடைந்த ஹரிகிருஷ்ணன், மீண்டும் நிம்மலின் வீட்டுக்கே சென்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதன் பிறகுதான் மூவரும் சேர்ந்து குமாரிடமிருந்து பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டார்கள். அப்போது இவர்களுடன் உதவிக்காகச் சேர்ந்துகொண்டவர்தான் துணை நடிகர் ஸ்டீபன்...” என்றபடி ‘இன்டர்வெல்’ விட்டார் உதவி கமிஷனர்!

குமார், ஹரிகிருஷ்ணன்
குமார், ஹரிகிருஷ்ணன்

“பார்ட்டிக்கு வாங்க!”

“ஜூன் 27-ம் தேதி குமாருக்குப் பிறந்தநாள். அவருக்கு போன் போட்டு பேசிய கிருத்திகா, ‘வீட்டுக்கு வாங்க... உங்களுக்கு பார்ட்டி தர்றேன்’ என்று நைசாகப் பேசியிருக்கிறார். அவர்களுக்குள் என்ன நெருக்கம் இருந்தது என்று தெரியவில்லை... சிறிதும் யோசிக்காமல் கிருத்திகாவை நம்பி வீட்டுக்கு வந்திருக்கிறார் குமார். அவரிடம் நெருக்கமாக இருப்பதுபோல கிருத்திகா நடிக்க... வீட்டில் மறைந்திருந்த நிம்மல், ஹரிகிருஷ்ணன், ஸ்டீபன் ஆகியோர் குமாரின் பின்னந்தலையில் இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். பிறகு அவரைக் கயிறு, கம்பியால் கட்டிவைத்து அடித்திருக்கிறார்கள். குமார் அணிந்திருந்த 16 சவரன் தங்க செயின், ஆறு மோதிரங்கள், பிரேஸ்லெட், 50,000 ரூபாய் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டார்கள். குமாரின் அலுவலக சாவியையும் மிரட்டி வாங்கியவர்கள், அங்கிருந்த அவரது வங்கி செக் புக்கை எடுத்துவந்து 10 லட்சம் ரூபாய், 4.3 லட்ச ரூபாய், ஒரு லட்ச ரூபாய் என்று எழுதி குமாரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். குமாரை வீட்டின் ஓர் அறைக்குள் கட்டிவைத்து, வீட்டை காலி செய்துவிட்டு துரைப்பாக்கம் ஏரியாவில் ஏற்கெனவே பார்த்துவைத்திருந்த மற்றொரு வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். இந்த விவகாரத்தில் நிம்மல் மற்றும் ஹரிகிருஷ்ணனைக் கைதுசெய்திருக்கிறோம். கிருத்திகாவையும் ஸ்டீபனையும் தேடிவருகிறோம்” என்றார்.

இன்னும் என்னென்ன நடக்குமோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism