Published:Updated:

சென்னை: க்வாரன்டைனில் பெண் மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமை! - இரண்டு அரசு மருத்துவர்கள் கைது

கொரோனா காலகட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர ஹோட்டலில் டாக்டர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தபோது, இரண்டு பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரண்டு டாக்டர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய அரசு டாக்டர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கொரோனா வார்டில் பணிபுரிந்த சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்தார். அதே ஹோட்டலில் டாக்டர் வெற்றிச்செல்வன் (35) என்பவரும் தங்கியிருந்தார்.

கைது
கைது
சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! - தனியாக வசித்து வந்த காவலாளி கைது

தனியாகப் பெண் டாக்டர் இருந்தபோது அங்கு சென்ற டாக்டர் வெற்றிச்செல்வன், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெண் டாக்டர், தி.நகர் துணை கமிஷனரிடம் புகாரளித்தார். அதன்பேரில் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸாரை விசாரணை நடத்தும்படி தி.நகர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து புகாரளித்த பெண் டாக்டர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டாக்டர் வெற்றிச் செல்வனை போலீஸார் கைதுசெய்தனர்.

இதேபோல அரசுப் பொது மருத்துவமனையில் கொரோனா பணி மேற்கொண்டிருந்த இன்னொரு பெண் டாக்டர், தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருக்கும் டாக்டர் மோகன்ராஜ் (28) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் மோகன்ராஜையும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைதுசெய்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் ஒரே நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு பெண் மருத்துவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் சக டாக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு