Published:Updated:

`சமைக்கமாட்டாள்; தாயை அசிங்கமாகத் திட்டினாள்'- மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சென்னை டிரைவர்

இலக்கியா
இலக்கியா

சமைக்காமல் ஹோட்டலில் உணவு வாங்கித் தந்ததால் மனைவியைக் கொலை செய்ததாக டிரைவர் ஜெயராஜ் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

சென்னை கிண்டி நேருநகர், பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (25). கார் டிரைவர். இவரின் மனைவி இலக்கியா (24). இவர், வேளச்சேரியில் உள்ள மாலில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவந்தார். கடந்த 30ம் தேதி இலக்கியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயராஜ் கூறினார். அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்பினர்.

ஜெயராஜ்
ஜெயராஜ்

இதுகுறித்து கிண்டி போலீஸார் விசாரணை நடத்தினர். இலக்கியா மரணம் குறித்து கிண்டி ஆர்.டி.ஓ விசாரணை நடந்தது. இந்தச் சமயத்தில் கிண்டி போலீஸாருக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. இலக்கியாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை. மாறாக அவரின் கழுத்தில் காயங்கள் உள்ளன. அதனால் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீஸாருக்கு ரிப்போர்ட் அளித்தார்.

அந்த ரிப்போர்ட் அடிப்படையில் ஜெயராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் என்மனைவியை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவளை எப்படி நான் கொலை செய்வேன் என்று கூறி நடித்திருக்கிறார். ஆனால், போலீஸார் தங்கள் பாணியில் ஜெயராஜிடம் விசாரித்தனர். போலீஸாரின் விசாரணையில் இலக்கியாவைக் கொலை செய்த தகவலை ஜெயராஜ் ஒப்புக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``திருவண்ணாமலை, கானராம்பூண்டி கிராமம், சிறுநாத்தூர் போஸ்ட், டேங்க் தெருவைச் சேர்ந்த வினோபா என்பவர் இலக்கியா தற்கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், `நான், நர்சிங் பயிற்சி பெற்றுவருகிறேன். எனது உறவினர் கோவிந்தன். அவரின் மனைவி சரோஜா. இவர்களுக்கு ஷோபா, இலக்கியா, அனிதா என மூன்று மகள்கள். இலக்கியாவும் அனிதாவும் இரட்டையர்கள்.

`சமைக்கமாட்டாள்; தாயை அசிங்கமாகத் திட்டினாள்'- மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சென்னை டிரைவர்

இலக்கியா, சரோஜா பிறந்த சில மாதங்களில் சரோஜா இறந்துவிட்டார். அதனால் இலக்கியாவை என்னுடைய அம்மா மணிமொழிதான் வளர்த்தார். அனிதாவை தாத்தா ஆதி வளர்த்தார். இலக்கியா, 10-வது வகுப்பு வரை படித்தாள். பின்னர், எங்கள் ஊரின் அருகில் உள்ள காரையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஜெயராஜை இலக்கியா காதலித்தார். 17.8.2018ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் கிண்டியில் வசித்துவந்தனர். கடந்த 29-ம் தேதி இலக்கியாவும் ஜெயராஜும் என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றனர். 30-ம் தேதி இலக்கியா தூக்கு போட்டு தற்கெலை செய்து கொண்டதாக போனில் எனக்கு தகவல் வந்தது. பிணவறையில் இலக்கியாவின் சடலத்தைப் பார்த்தேன்' என்று கூறியிருந்தார்.

2008 ஆசிட் வீச்சு வழக்கில் 3 பேர்; 2019 டாக்டர் கொலையில் 4 பேர்!- `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்ஜனார்

இலக்கியாவின் உறவினர் வினோபா கொடுத்த புகாரில் இலக்கியாவின் சமையல் பிடிக்கவில்லை என்று ஜெயராஜ் சண்டை போடுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனால் இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கருதினோம். ஆனால் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் இலக்கியா கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. அதன்பேரில் ஜெயராஜிடம் விசாரித்து அவரைக் கைது செய்துள்ளோம். 5 நாள்களுக்குப் பிறகு நாடகமாடிய ஜெயராஜ் சிக்கிக் கொண்டார்" என்றனர்.

ஜெயராஜ் போலீஸாரிடம், ``நான், பள்ளிக்கரணையில் உள்ள ஒருவரின் காரை ஓட்டிவருகிறேன். இலக்கியாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இலக்கியா, செக்யூரிட்டியாகப் பணியாற்றுவதால் காலதாமதமாகத்தான் இரவு வீட்டுக்கு வருவார். அதனால் அவரால் சமைக்க முடியவில்லை. திருமணத்துக்குப் பிறகும் ஹோட்டலில்தான் நான் சாப்பிட்டு வந்தேன்.

இலக்கியா, 10-ம் வகுப்பு வரை படித்தாள். பின்னர், எங்கள் ஊரின் அருகில் உள்ள காரையேந்தல் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஜெயராஜை இலக்கியா காதலித்தார். 17.8.2018ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் கிண்டியில் வசித்துவந்தனர். கடந்த 29-ம் தேதி இலக்கியாவும் ஜெயராஜும் என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றனர்.
போலீஸ் புகார்

விடுமுறையில் இலக்கியா வீட்டில் இருந்தாலும் அவர் சமைப்பது எனக்கு பிடிக்காது. அதனால் எங்களுக்குள் சண்டை வரும். இதனால் என்னுடைய அம்மாவை திருவண்ணாமலையிலிருந்து சென்னை வீட்டுக்கு அழைத்துவரலாம் என்று இலக்கியாவிடம் கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. என் அம்மா எங்களுடன் தங்க, இலக்கியா எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் கடந்த 29ம் தேதி எங்களுக்குள் சண்டை வந்தது. அப்போது இலக்கியா, என் அம்மாவை அசிங்கமாகத் திட்டினார். அதனால்தான் அவரின் கழுத்தைப் பிடித்து நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். கொலையை மறைக்க தற்கொலை செய்தார் என்று நாடகமாடினேன். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டால் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு