Published:Updated:

செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கணவரின் சடலம் - அதிர்ச்சியில் உறைந்த மனைவி

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

சென்னை அம்பத்தூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வி, மின்தடை ஏற்பட்ட போது கண்விழித்தார். பிறகு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் அவர் வெளியில் வந்தபோது கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

திருமணம்

சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு மதுரா மேட்டூர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்தாஸ் (30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி தமிழ்ச்செல்வி (24). இவர்கள் இருவருக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்கு இரண்டரை வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். ஊரடங்கு காரணமாக ராம்தாஸ் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மதுவுக்கு அடிமையான ராம்தாஸ், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

ஊரடங்கு
ஊரடங்கு

கடந்த 27-ம் தேதி மதுபோதையில் ராம்தாஸ் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி தமிழ்ச்செல்வியிடம் மதுகுடிக்கப் பணம் கேட்டு தகராறு செய்தார். நள்ளிரவு 12 மணி வரை தகராறு நீடித்தது. இதையடுத்து தமிழ்ச்செல்வி, குழந்தைகளுடன் பெட்ரூம்பிற்குச் சென்று தூங்கச் சென்றுவிட்டார். ராம்தாஸ், வீட்டின் ஹாலில் படுத்திருந்தார். திடீரென மின்சாரம் தடைப்பட்டது. உடனே தூங்கிக்கொண்டிருந்த தமிழ்ச்செல்வி, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் வெளியில் வந்தார். அப்போது, ஹாலில் இருட்டில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தமிழ்ச்செல்வி பயந்து அலறினார். அவரின் சத்தம் கேட்டு ராம்தாஸின் அப்பா, மற்றும் உறவினர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது ராம்தாஸ் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

தற்கொலை

அதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் ராம்தாஸை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ராம்தாஸ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இந்தத் தகவல் அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராம்தாஸின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து ராம்தாஸின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலை
தற்கொலை
மாதிரிப் படம்

அம்பத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரில், ``நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடைய சொந்த ஊர் கரளபாக்கம். ராம்தாஸிக்கும் எனக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. என் கணவன் 9-வது வகுப்பு வரை படித்துவிட்டு எலக்ட்டீசினியாகப் பணியாற்றி வந்தார். ஊரடங்கால் மதுவுக்கு அடிமையானார். 27-ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர், மதுவாங்க பணம் கேட்டு தகராறு செய்தார்.

6 ஆண்டுகள்

பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது கணவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்ய ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். ராம்தாஸின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது..

தற்கொலை
தற்கொலை
Representational image

இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், ``அம்பத்தூர் சூரப்பட்டில் தற்கொலை செய்துகொண்ட ராம்தாஸ், மதுவுக்கு அடிமையாக இருந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் அவருக்கு மது கிடைத்தது எப்படி எனத் தெரியவில்லை. மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்த அவர், தூக்குப்போட்டுள்ளார்"என்றார்.

இரண்டு குழந்தைகள், மனைவியைத் தவிக்கவிட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு