Published:Updated:

`நீ நார்மலாக இல்லை' என்றாள்! - விபரீத முடிவுக்குமுன் சென்னை இன்ஜினீயர் பேசிய அதிர்ச்சி ஆடியோ

இன்ஜினீயர் நடராஜன்
இன்ஜினீயர் நடராஜன்

நடராஜன் செல்போனிலிருந்து சில ஆடியோக்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நடராஜன் தற்கொலை செய்வதற்கு முன் பேசிய ஆடியோ ஆதாரமாக மாறியுள்ளது.

சென்னை மணலி, சேலவாயல், துர்கை அவென்யூ 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் நடராஜன் (22). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 24-ம் தேதி நடராஜன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரின் அப்பா ஏழுமலை மணலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், என் மகன் நடராஜன் தற்கொலைக்கு அவன் காதலித்த பெண்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

நடராஜன்
நடராஜன்
`காய்ச்சல்; கொரோனா பீதி' - சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதிய தம்பதி

அதன்பேரில் மணலி போலீஸார் நடராஜன் காதலித்த பெண் மற்றும் அவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அதோடு நடராஜன் செல்போனிலிருந்து சில ஆடியோக்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நடராஜன் தற்கொலை செய்வதற்கு முன் பேசிய ஆடியோ ஆதாரமாக மாறியுள்ளது. அதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதனால் நடராஜன் தற்கொலை வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜினீயர் நடராஜனின் செல்போன் ஆடியோவில், `ரொம்ப நாள் கழித்து போனில் பேசியதில் சந்தோஷமாக இருக்கிறேன். இத்தனைநாள் பேசாமல் இருந்ததை நினைச்சு டெய்லி பீல் பண்ணி அழுதுட்டு இருந்தேன். ரொம்ப கஷ்டத்தில் இருந்தேன். ஏன் என்னுடன் நார்மலா பேசுவதில்லை. அவள் என்ன சொன்னாள். நான் உன்னைப்பற்றியும் அவளைப்பற்றியும் தப்பா பேசவில்லை. அவள் ஓவராகப் பேசிக்கொண்டே போகிறாள். நான் உனக்கு கான்ஃபரன்ஸ் காலில் போன் பண்ணக் கூறினால் அவள் போடுவதில்லை. எனக்கு உன்னுடைய வாய்ஸைக் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று கூறினால் அவன் போன் கால் பண்ணுவதில்லை.

நடராஜன்
நடராஜன்
`நேற்று அட்மிட்; இன்று விபரீத முடிவு!’ - சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு அதிர்ச்சி

மேலும் நீ நார்மலாக இல்லை என்று கூறினாள்' என்று ஒரு ஆடியோ முடிவடைகிறது.

அடுத்த ஆடியோவில், `எனக்கு நீதான், உனக்கு நான்தான். யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நான் உன்னை விட்டுப் போக முடியாது. நான் உன்னை உண்மையாக லவ் பண்ணுகிறேன். என் மீது எந்தத் தப்பும் இல்லை. என்னிடம் கோபத்தில் பேசாதே. என் மீது தப்பு இருந்தால் கேளு' என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது.

நடராஜனின் ஆடியோ அடிப்படையில் மணலி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு