Published:Updated:

`அந்தப் பெண்ணை சந்திக்க முடியவில்லை?!' - ஊரடங்கால் விபரீத முடிவெடுத்த சென்னை இன்ஜினீயர்

ஹரிபிரசாத்
ஹரிபிரசாத்

ஊரடங்கால் அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த சென்னை இன்ஜினீயர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு ஒருதலைக் காதல் காரணமாகச் சொல்லப்படுகிறது.

சென்னை முகப்பேர் கிழக்கு வளையாபதிரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (26). சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இவர், கடந்த 4 மாதங்களாக சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஹரிபிரசாத், அலுவலகத்துக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

ஊரடங்கு காரணமாக அந்தப் பெண்ணை ஹரிபிரசாத் சந்திக்க முடியாத மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் அறையில் ஆய்வு செய்தபோது எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்துவருகிறோம்.
போலீஸார்
தற்கொலை
தற்கொலை
Representational image

இந்த நிலையில் ஹரிபிரசாத், அறையின் கதவு இன்று நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. உடனே உள்ளே சென்று பார்த்தபோது கயிறு மூலம் மின்விசியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து, உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்கு பதிந்த ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

`மாமா என்று அழைத்தால் கடன் கொடுப்பார்!’ -மீஞ்சூர் இளைஞர் மரணத்துக்குப்பின் வெளிவந்த அதிர்ச்சி வீடியோ

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஹரிபிரசாத், வேலை பார்த்த இடத்தில் ஒரு பெண்ணை ஒருதலையாகக் காதலித்துவந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக அந்தப் பெண்ணை ஹரிபிரசாத் சந்திக்க முடியாத மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரின் அறையில் ஆய்வு செய்தபோது எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. ஹரிபிரசாத்தின் செல்போனை ஆய்வு செய்துவருகிறோம். அவரின் நண்பர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

சென்னை இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

`3 முறை தற்கொலை சிந்தனை; 24 மணிநேரமும் நண்பர்கள் காவல்!' -முகமது ஷமி சொன்ன சீக்ரெட்
அடுத்த கட்டுரைக்கு