Published:Updated:

`சிரித்துப் பேசிய காதலி; விபரீத முடிவெடுத்த சென்னை மாணவர்' - தந்தையின் புகாரால் வெளிவந்த உண்மை

Representational image
Representational image

உயிருக்கு உயிராகக் காதலித்த பெண், இன்னொருவரிடம் சகஜமாக சிரித்துப் பேசியதைத் தாங்க முடியாமல், சென்னையைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை மணலி, சேலவாயல், துர்கை அவென்யூ 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர், மணலி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். என் மனைவியின் பெயர் ராமாயி. எனக்கு அருண்குமார், நடராஜன் (22), சின்னராஜ் என மூன்று மகன்கள் உள்ளனர். நடராஜன் துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில், சிவில் இன்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்துவந்தான். 23.5.2020-ம் தேதி இரவு 11.30 மணியளவில், நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு சென்றுவிட்டோம்.

எனது 2-வது மகன் நடராஜன், எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள வீட்டுற்குச் சென்று தூங்குவதாகச் சொல்லி உள்ளே சென்றான். 24.5.2020-ம் தேதி காலை 7 மணி வரை கதவு திறக்கவில்லை. அதனால் நான், கதவை தட்டிப்பார்த்தேன். ஆனாலும் கதவு திறக்காததால் கையால் கதவைத் தள்ளினேன். அப்போது கதவு திறந்துவிட்டது. நான் உள்ளே சென்று பார்க்கும் போது எனது மகன் நடராஜன் ஊதா கலர் புடவையால் சீலிங் பேனில் தூக்குமாட்டி தொங்கிக்கொண்டிருந்தான்.

சடலம்
சடலம்
மாதிரிப் படம்
`3 பெண்களுடன் நட்பு; காதல் பரிசாகத் திருட்டு பைக்குகள்!' - சென்னையில் சிக்கிய இன்ஜினீயர்

அவனைக் கீழே இறக்கிப் பார்த்தபோது உயிர் இல்லை. என் மகன் நடராஜன் தூக்குப் போட்டு இறந்ததற்கு அவன் காதலித்த பெண்தான் காரணம். அந்தப் பெண்ணிடம் விசாரணை செய்ய வேண்டும். என் மகன் நடராஜனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு நல்லடக்கம் செய்ய என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். நடராஜனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதைனைக்காக போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஏழுமலை அளித்த புகாரின் பேரில் நடராஜன் காதலித்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நடராஜனின் இறப்புக்கான காரணம் தெரியவந்தது.

தற்கொலை
தற்கொலை
Representational image
`ஒரே கொள்ளை ஒஹோன்னு வாழ்க்கை!’- திருட்டு நகைகளைக் கொடுத்து காதலிகளின் மனதில் இடம்பிடித்த 3 இளைஞர்கள்

இதுகுறித்து மணலி போலீஸார் கூறுகையில், ``நடராஜனின் காதலி, வேறு ஒருவருடன் சகஜமாக சிரித்துப் பழகியுள்ளார். அதைப் பார்த்த நடராஜன் மனமுடைந்துள்ளார். அதனால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு