Published:Updated:

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்; இன்ஜினீயரிங் மாணவியுடன் திருமணம்- 7வது நாளில் நடந்த சோகம்

எஸ்.மகேஷ்

சென்னை திரிசூலம் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலித்த டிரைவர், இன்ஜினீயரிங் மாணவியைத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 7-வது நாளில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் மாணவி.

manisha and abinraj
manisha and abinraj

சென்னை திரிசூலம், லட்சுமணன்நகரைச் சேர்ந்தவர் டிரைவர் முருகன். இவரின் மகள் மனிஷா (21). சென்னையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துவந்தார். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் அபின்ராஜிக்கும் மனிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. வீட்டை விட்டு வெளியேறிய மனிஷா, அபின்ராஜ் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி பெசன்ட் நகரில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமண முடிந்த 7 ம் நாளில் அதாவது, ஆகஸ்ட் 31-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு மனிஷா, தற்கொலை செய்துகொண்டார்.

manisha
manisha

இதுதொடர்பாக பல்லாவரம் உதவி கமிஷனர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை நடத்தினர். பிறகு மனிஷாவை தற்கொலைக்குத் தூண்டியதாக அபின்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மனிஷா, அபின்ராஜ், அவரின் தோழி அனிதா ஆகியோர் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் இன்ஜினீயரிங் மாணவி மனிஷா, கண்ணீர்மல்க அனிதாவிடமும் அபின்ராஜிடமும் பேசுகிறார். அந்த உரையாடல் இதோ...

மனிஷா: அனிதா... ப்ளீஸ் அனிதா, உன் காலில் விழுகிறேன். நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், என்னை தாலி மட்டும் கட்ட விடு.

அபின்ராஜ்: நான் சொல்வதைக் கேளு மனிஷா.. அனிதாவால்தான் நான் உயிரோடு இருக்கிறேன். குட்டிம்மா (அனிதா) நீ சொல்லு நான் என்ன செய்ய வேண்டும்.

அனிதா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மனிஷா: என் நிலைமை உனக்கு புரியுதா அனிதா... நான்தான் தப்பு பண்ணிவிட்டேன். பிச்சை போடுகிற மாதிரி தாலி பிச்சை போடு அனிதா... ப்ளீஸ்

ABINRAJ
ABINRAJ
`உன்னை நினைக்காமல்  இருக்க முடியல; மறக்கவும் முடியல’ - தற்கொலைக்கு முன் வீடியோ அனுப்பிய மாணவன்!

அபின்ராஜ் : நீ படிப்பு முடியும் வரை ஹாஸ்டலிலேயே இரு மனிஷா... படித்துவிட்டு டிகிரியைக் கையில் வாங்கு.

மனிஷா: நான் தப்பு பண்ணிவிட்டேன். எனக்கு புரியுதுப்பா. என்னை மன்னித்து விடுங்க.. எனக்கு யாரும் இல்லை

அபின்ராஜ் : அனிதாவின் குணத்தில் பாதிகூட உனக்கு இல்ல. உன்னை (மனிஷா) உள்ளங்கையில் வைத்து தாங்கினேன் குட்டிம்மா. நீ என்ன பதில் சொல்ற.

மனிஷா: நீங்கள் இருவரும் பேசுங்க. வீட்டுக்கே வந்து பேசுங்க... என் வாழ்க்கைக்குப் பிச்சை போடு.. நானே உன்னை வீட்டுக்கு அழைத்துவருகிறேன். எனக்கு யாருமே இல்ல.

அபின்ராஜ் : அனிதாவை விட்டுவிட்டு உன்னை வீட்டுக்கு அழைத்துவிட்டு வந்தேன். நான் எல்லாவற்றையும் உன்னிடம் சொன்னேன். அனிதாவை கல்யாணம் கூட பண்ண முடியாது. நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.

மனிஷா : நான் எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன். உங்கள் காலில்கூட விழுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். அனிதாவை குட்டிம்மா என்று சொல்ற... என்னை அவ்வளவு வெறுத்துவிட்டாயா. நீங்கள் இரண்டு பேரும் வாங்க... நான் பேசுகிறேன்.

அபின்ராஜ் : இரண்டு பேரையும் உயிருக்கு உயிராக லவ் பண்ணினேன்.

மனிஷா : உங்களை புரிஞ்சிகிட்டேன். நீங்கள் என்னை நல்லா பார்த்துக்கிட்டீங்க. அனிதா உன்னிடம் கெஞ்சி கேட்கிறேன். அபின்ராஜை விட்டுக் கொடு... அபின்ராஜை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

manisha
manisha

அபின்ராஜ்: மனிஷா நீ படி... அதுவரை நான் நிம்மதியாக இருந்து கொள்கிறேன். உங்க இரண்டு பேரையும் கல்யாணம் செய்ய வேண்டிய சூழல் வந்தால் நான் என்ன செய்வேன் என்று தெரியும். நான் உயிரோடு இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும்.

மனிஷா : நான் தெரியாமல் பேசிவிட்டேன். நான் என்ன செய்ய வேண்டும். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் அம்மா இல்லாத பொண்ணு.

அபின்ராஜ் : அனிதா இல்லையென்றால் அந்த வீடே இல்ல. ஆனால் அனிதா என்ன சொன்னாள் தெரியுமா, நான் குடித்துக் குடித்து சாகணும் போல இருக்கிறது.

மனிஷா : என் மீதுதான் தப்பு, எனக்கு ஒரு சான்ஸ் கொடு.

அபின்ராஜ் : நான் என்ன தப்பு செய்தேன் தெரியுமா

மனிஷா : நீ என்னை கூட்டிட்டு வந்ததுதான் தப்புன்னு சொல்ற.

அபின்ராஜ் : நான் சொல்வதை மட்டும் கேளு.

மனிஷா : செல்லம்... என்னை ஏற்றுக்கொள்... நான் எங்கதான் போவேன்.

அபின்ராஜ் : அது தெரிந்துதான் கம்முன்ணு இருக்கேன்...

மனிஷா : நான் செத்துவிடுவேன்...

அபின்ராஜ்: நீ சாவதற்கு முன் நான் செத்துவிடுவேன்.

மனிஷா: என்னால் வீட்டில் இருக்க முடியல.

அபின்ராஜ் லைனில் ஒருத்தி இருக்காளே. நான் கஷ்டபடுவேன் என்று எதாவது சொல்கிறாளா.... அவள் அழாமல் இருக்கிறாள்.

மனிஷா : அனிதாவிடம் பேசிக்கொள்.

அபின்ராஜ் : குட்டிம்மா உன்னை நான் எவ்வளவு லவ் பண்ணினேன் என்று உனக்குத் தெரியும்.

மனிஷா : ஏன் செல்லம் என்னை ஏன் வெறுக்கிற.

அபின்ராஜ்: உன்னை மட்டும் நான் வெறுக்கவில்லை. வாழ்க்கையை வெறுக்கிறேன்.

மனிஷா : நான் அவ்வளவு பெரிய தப்பா பண்ணிவிட்டேன். வாடா செல்லம். என்னால் இங்கு இருக்க முடியல. நான் நரகத்தில் இருக்கிறேன்.

அபின்ராஜ் : அழாதே மனிஷா. உன்னை நான் எதுவும் சொல்லவில்லை.

மனிஷா : என்னை குட்டிம்மான்னு சொல்லு செல்லம்.

அபின்ராஜ்: நீ (மனிஷா) படித்து முடி அனிதா, நீ, நான் என மூன்று பேரும் பேசுவோம்.

மனிஷா: அவள் கூட (அனிதா) பேசு, பழகு நான் எதுவும் சொல்ல மாட்டேன்.

அபின்ராஜ்: என்னை மட்டும் நிம்மதியாக இருக்க விடு. அனிதாவை நான் கொல்லட்டுமா.

manisha
manisha

மனிஷா: அனிதாவை நான் வீட்டோடு வைத்துக்கொள்கிறேன்.

அபின்ராஜ் : அனிதா.... மனிஷா பேசுறது கேட்குதா...

மனிஷா: என்னை ஒருமுறை குட்டிம்மான்ணு கூப்பிடு.

அபின்ராஜ் : நீ லூசு மாதிரி பேசாதே .

மனிஷா: எனக்கு தாலிப்பிச்சை கொடு அனிதா.

அபின்ராஜ்: எனக்கு கோபம்தான் வருது.

மனிஷா: நான் உன்னைப் புரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே. நான் இப்போது என்ன செய்ய.

அபின்ராஜ்: நான் வாழ்க்கையை வெறுத்துவிட்டேன்.

மனிஷா: நான் தப்பு பண்ணிவிட்டேன்.

அபின்ராஜ்: நான் ரோட்டுக்கு வந்துவிட்டேன்.

மனிஷா : நீ என் புருஷன் என்று நினைத்துதான் இத்தனை நாள் வாழ்ந்தேன். என்னைப் பார்க்க வா... செல்லம் என்னைப்பார்க்க பிடிக்கலையா.

அபின்ராஜ் : உங்க இரண்டு பேரையும் விட்டுவிட்டு என்னால் ஜாலியா இருக்க முடியாதா மறுபடியும் என் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்

மனிஷா : என்னை உனக்குப்பிடிக்கலையா?

அபின்ராஜ் : அனிதாகூட உன்னிடம் (மனிஷா) பேசதான் சொல்றா. இதுதான் அனிதாவின் பெருந்தன்மை. மனிஷா நீ ஏன் இப்படிச் செய்தாய்.

manisha
manisha

மனிஷா: என்னை ஏத்துக்கொள் செல்லம்... அனிதா, உன்னிடம் காலில் விழுந்து தாலி பிச்சை கேட்கிறேன் அனிதா எனக்கு ஒரு முடிவைச் சொல்லு.

அனிதா: ஹலோ..... விடுங்க பார்த்துக்கலாம்.

மனிஷா: அனிதா ஒரு குழந்தை செத்துப்போய்ட்டு டா... அந்தக் குழந்தையோடு நானும் செத்துப்போயிருக்கலாம். அப்போதாவது நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். நான் எங்கு போவேன் அனிதா. எனக்கு தாலிப் பிச்சை மட்டும் கொடு.

அனிதா: அமைதியாக இருக்கிறார்... தங்கப் புள்ள (அபின்ராஜ்) ஹலோ....

மனிஷா: ஹலோ செல்லம்... ஹலோ....

என்பதோடு இந்த உரையாடல் முடிகிறது.

இந்த உரையாடலின் பதிவை மனிஷாவின் செல்போனிலிருந்து எடுத்த முருகன், அதைக் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டதாக முருகன் அபின்ராஜ் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பல்லாவரம் போலீஸார் கூறுகையில், ``மனிஷா, தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்துவருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் மனிஷா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. இருப்பினும் ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்து அறிக்கை சமர்பித்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அபின்ராஜ் தரப்பில் பேச அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

abinraj
abinraj

லட்சுமணன்நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``மனிஷாவுக்கு மூன்று வயது இருக்கும்போது அவரின் அம்மா இறந்துவிட்டார். அவரின் அப்பாதான் கஷ்டப்பட்டு மனிஷாவை வளர்த்தார். அபின்ராஜ், பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு டிரைவராக வேலை பார்த்தார். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்தனர். திருமணத்துக்கு முன்பே அபின்ராஜ், மனிஷா ஆகிய இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்தனர். மனிஷாவை நண்பர்கள் வீடு உறவினர்கள் வீடு என குடியமர்த்தி வைத்திருந்தார் அபின்ராஜ். இந்தச் சமயத்தில் மனிஷா, கர்ப்பம் அடைந்தார். மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் எட்டி உதைத்ததால் கர்ப்பம் கலைந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் அபின்ராஜ் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். 24-ம் தேதி இரவுதான் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து பெசன்ட் நகரில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தூக்கில் தொங்கிய மனிஷாவின் காலிலும் கழுத்திலும் காயங்கள் உள்ளன. அதுதான் மனிஷாவின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றனர்.

மனிஷாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழுமா?