Published:Updated:

சென்னை: `கொரோனா அச்சம்; மன உளைச்சல்!' - வாக்கிங் சென்ற ஜிஎஸ்டி அதிகாரி எடுத்த விபரீத முடிவு

கொரோனாவால் ஆபீஸர் `தற்கொலை
கொரோனாவால் ஆபீஸர் `தற்கொலை ( மாதிரிப் படம் )

சென்னையில் ஜிஎஸ்டி சீனியர் நுண்ணறிவு பிரிவு ஆபீஸர், `தனக்கு வாழ பிடிக்கவில்லை' என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம், நியூடெக் ருக்மணி ப்ளாட்ஸ் லேக் ஏரியா 6-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்ணன் (54). இவர், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் சீனியர் நுண்ணறிவுப் பிரிவு ஆபீஸாகப் பணியாற்றிவந்தார். இவரின் மனைவி கலா. இவர் நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆபீஸராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு ஸ்ரீராம் ஆதித்யா என்ற மகன் உள்ளார். இவர் சிஏ படித்து வருகிறார்.

நுங்கம்பாக்கம்
நுங்கம்பாக்கம்

ஸ்ரீராம் ஆதித்யா வசதிக்காக வீட்டை மாற்ற முடிவு செய்தனர். இதற்காக நுங்கம்பாக்கம் ஜானகி ப்ளாட்ஸ் லேக் ஏரியா, 5-வது குறுக்கு தெருவில் உள்ள சொந்தவீட்டை காலி செய்துவிட்டு நுங்கம்பாக்கம் ருக்மணி ப்ளாட்ஸிக்கு மார்ச் மாதம் வாடகைக்கு சென்றனர். மே மாத இறுதியில் மணிகண்ணனுக்கும் கலாவுக்கும் ஸ்ரீராம் ஆதித்யா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மணிகண்ணனுக்கும் கலாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கலா, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மணிகண்ணன், தன்னுடைய சொந்த வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மணிகண்ணனுக்கு நீரிழிவு நோய் உள்ளது அதனால் தினமும் அவர் நுங்கம்பாக்கத்திலிருந்து மெரீனா பீச் வரை சைக்கிளில் செல்வார். 7-ம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு ஸ்ரீராம் ஆதித்யாவுக்கு மணிகண்ணன் காபி போட்டு கொடுத்துவிட்டு சைக்கிளில் மெரீனா பீச்சுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தன்னுடைய சொந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். காலை 7.45 மணியளவில் கலா, மணிகண்ணனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை.

நுங்கம்பாக்கம் காவல் நிலையம்
நுங்கம்பாக்கம் காவல் நிலையம்

இதையடுத்து ஸ்ரீராம் ஆதியா, ஜானகி ப்ளாட்ஸில் உள்ள வீட்டுக்குச் சென்று அப்பாவை பார்க்கச் சென்றார். அப்போது, படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் மணிகண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம் ஆதித்யா, அங்கிருந்து ஓடி வந்து கலாவிடம் கண்ணீர்மல்க விவரத்தைக் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கலாவும் ஸ்ரீராம் ஆத்யா மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியோடு மணிகண்ணனின் சடலத்தை மீட்டனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மணிகண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மணிகண்ணனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்ணன் மரணம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் இந்திய தண்டனைச் சட்டம் 174 வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மணிகண்ணனின் அறையை போலீஸார் சோதனை நடத்தியபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் `எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என்று எழுதப்பட்டிருந்தது.

தற்கொலை
தற்கொலை
Representational Image
சென்னை: `ஆசிட் பாட்டில்; கழிவறையில் வாந்தி' - தடய அறிவியல் துறை பெண் அதிகாரி தற்கொலை?

மணிகண்ணன் மனைவி கலா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், `எனக்கும் என் கணவருக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் நான் மருத்துவமனையிவல் சிகிச்சை பெற்றேன். பின்னர், அங்கிருந்து திரும்பி வந்தபிறகு மணிகண்ணன் சிறிது மன உளைச்சலில் காணப்பட்டார். தனக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உண்டாகுமோ என்ற பயத்தில் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என நான் கருதுகிறேன். அவரின் இறப்பில் யார்மீதும் எந்த சந்தேகமும் இல்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

உயர் பதவியிலிருந்த மணிகண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு