Published:Updated:

சென்னை: ரூ,20 லட்சத்துக்காகக் கொலை செய்யப்பட்ட ஐடி நிறுவன ஊழியர் - நாடகமாடியவர் சிக்கியது எப்படி?

கொலை
கொலை ( representational image )

சென்னையில் 20 லட்சம் ரூபாயை அபகரிக்க ஐடி நிறுவன ஊழியரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியவரை போலீஸார் கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 32. மாற்றுத்திறனாளியான இவர், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தங்கியிருந்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். விக்னேஷை கவனித்துக்கொள்ள தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி சென்னையில் தங்கியிருந்தார். அதற்காக அவருக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.

கொலை
கொலை
Representational Image

இந்தநிலையில், விக்னேஷ் படுக்கையறையில் இறந்து கிடப்பதாக ஆறுமுகசாமி, விக்னேஷின் உறவினர்களுக்குக் கடந்த திங்கள்கிழமை தகவல் தெரிவித்தார். அதைக் கேட்டு விக்னேஷின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குமரி: நகை பறிக்கும்போது கூச்சலிட்ட பெண்! - குளத்தில் தள்ளிக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விக்னேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விக்னேஷின் முகத்தில் காயம் இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது, அதனால் ஆறுமுகசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினார். அப்போது விக்னேஷுக்கு இதயக் கோளாறு இருந்ததால், அவர் இறந்திருக்கலாம் என அவர் சொல்லியிருக்கிறார்.

பணம்
பணம்
representational image

உடனே போலீஸார், `முகத்தில் எப்படிக் காயம் ஏற்பட்டது?’ எனக் கேள்வி கேட்டனர். அதற்கு ஆறுமுகசாமி முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஆறுமுகசாமி, உண்மைகளைக் கூறினார்.

குமரி: நகை பறிக்கும்போது கூச்சலிட்ட பெண்! - குளத்தில் தள்ளிக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``ஆறுமுகசாமியிடம் விசாரித்தபோதுதான் விக்னேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான விக்னேஷ், ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அவரின் வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் இருந்திருக்கிறது.

கைது
கைது
Representational Image

அதை அபகரிக்கத் திட்டமிட்ட ஆறுமுகசாமி, தனது திட்டத்தை நண்பர் நாராயணனிடம் தெரிவித்தார். இதையடுத்து நாராயணன் மூலம் விக்னேஷுக்கு ஆறுமுகசாமி கொலை மிரட்டல் விடுத்தார். ஆனால், அதை விக்னேஷ் அலட்சியபடுத்தியதால் வேறு வழியில் பணத்தைப் பறிக்க இருவரும் திட்டமிட்டனர். அதனால், விக்னேஷைக் கொலை செய்துவிட்டு ஆன்லைன் மூலம் பணத்தைத் தங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றலாம் என முடிவு செய்தனர். அதற்காக தூங்கிக்கொண்டிருந்த விக்னேஷை நாராயணனும் ஆறுமுகசாமியும் சேர்ந்து தலையணையால் அமுக்கினார். அப்போதுதான் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்திருக்கிறோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு