Published:Updated:

சென்னை: ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஐ.எஃப்.எஸ்

வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்மீது வரும் திங்கள்கிழமைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை: ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வேலூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்மீது வரும் திங்கள்கிழமைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
ஐ.எஃப்.எஸ்

வேலூரைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் (International Finance Services) நிறுவனம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கோடி கணக்கான ரூபாயை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பணத்தை இழந்தவர்களில் சிலர், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் புகாரளித்தாலும், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், லோக்கல் காவல் நிலையங்களில், `இந்தப் புகாரை பொருளாதார குற்றப்பிரிவில் கொடுங்கள்!' என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கூறி அனுப்பிவைத்து வருகின்றனர். இந்தத் தகவல் நமக்குத் தெரியவந்ததும் ஜூலை முதல் வாரத்தில் வெளியான ஜூனியர் விகடனில் “கோடி கோடியாக சுருட்டுகிறார்கள்...” - நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம். அதன்பிறகும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்தச் சூழலில் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். கார்த்திக் தரப்பில் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் ஆஜராகினார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ``வரும் திங்கள்கிழமைக்குள் (8.8.2022-ம் தேதி) சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும்" என தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ் கூறுகையில், ``புகார்தாரர் கார்த்திக் மட்டும் 56 லட்சம் ரூபாய், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கார்த்திக் கூறியதன் பேரில் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து 18 கோடி ரூபாய் வரை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் நிதி நிறுவனம் கூறியப்படி வட்டி பணத்தைக் கொடுக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. அது குறித்து காவல் நிலையங்களில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால்தான், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம்.

வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ்
வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷ்

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வரும் 8-ம் தேதிக்குள் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் கார்த்திக் மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமானவர்கள் நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏமாந்துள்ளதாக தகவல் உள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர், தி.நகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள், பொருளதார குற்றப்பிரிவின் எஸ்.பி, கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகிய 8 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்த்துள்ளோம். அதனால் விரைவில் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.