Published:Updated:

சென்னை: ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை போலீஸ்!

பாலியல் தொல்லை

சென்னை ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் மேற்கு வங்கம் சென்றுள்ளனர்.

சென்னை: ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை போலீஸ்!

சென்னை ஐஐடி மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறல் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் மேற்கு வங்கம் சென்றுள்ளனர்.

Published:Updated:
பாலியல் தொல்லை

மாணவிக்குப் பாலியல் தொல்லை:

சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் படித்துவருகிறார். இந்த மாணவி கடந்த 2017-ம் ஆண்டு முதல், தன்னுடன் பயின்ற கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய சக மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இந்த விவகாரம் குறித்துத் தனது பேராசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், அந்த மாணவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் அவர் நடந்துகொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

இந்தச் சம்பவத்தில் மனவேதனையடைந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2021-ம் ஆண்டு, ஜூன் 9-ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்கள் உட்பட எட்டு நபர்கள் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடரப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேகமெடுத்தது வழக்கு:

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் பாதிக்கப்பட்ட அந்த மாணவி கடந்த 22-ம் தேதி மகளிர் ஆணையத் தலைவரைச் சந்தித்து புகார் வழங்கியுள்ளார். அந்தப் புகார் மனுவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம், ``பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு ஐஐடி நிர்வாகம் முழு ஆதரவையும் வழங்கும். வழக்கு விசாரணைக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கிவருகிறோம். எங்கள் நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை விசாரிப்பதற்கான அனைத்துச் செயல்முறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்" என்று விளக்கம் அளித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கை விசாரிக்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைப் பிடிக்கத் தனிப் படை காவல்துறையினர் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர். அதோடு, தனிப்படை போலீஸார் குற்றம்சாட்டப்பட்ட மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மாவைக் கொல்கத்தாவில் கைதுசெய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism