Published:Updated:

வேலைக்குச் சேர்ந்த முதல்நாள்! - திருச்சி பெண் ஐ.டி ஊழியருக்கு சென்னையில் நேர்ந்த சோகம்

தனிதா ஏன் தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்றார் என்று விசாரித்து வருகிறோம். அவர் யாரிடமும் சகஜமாகப் பேசவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

danita
danita

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் ஐ.டி நிறுவனத்தின் 8-வது மாடியிலிருந்து பெண் இன்ஜினீயர் ஒருவர் கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்குப் போராடினார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கூறினர்.

danita
danita

இதுகுறித்து தகவலறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் தனிதா ஜூலியஸ் (24). திருச்சியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மேலும், இவர் தி.நகரில் தங்கியிருந்து ஐ.டி நிறுவனம் ஒன்றில் நேற்று முன்தினம் வேலையில் சேர்ந்தார். வேலையில் சேர்ந்த வந்த முதல்நாளிலேயே தனிதா ஜூலியஸ் இறந்துள்ளார். இதனால் போலீஸார் அவர் வேலை பார்த்த நிறுவன ஊழியர்கள், காவலாளிகள் ஆகியோரிடம் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தனிதா ஜூலியஸ் வடபழனியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார். 3-வது மாடியில் தான் இவருக்கு வேலை.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் அவர் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். மேலும், அவர் கொண்டு வந்த மதிய உணவையும் சாப்பிடவில்லை. ஐ.டி நிறுவன அலுவலகத்தின் 9-வது மாடியில் உணவகம் உள்ளது. உணவகத்திலிருந்து அனுமதியில்லாத 8-வது மாடிக்கு மாடிப்படி வழியாக அவர் வந்துள்ளார். அதைச் சிலர் பார்த்துள்ளனர். தனிதா ஏன் தடைசெய்யப்பட்ட பகுதிக்குச் சென்றார் என்று விசாரித்து வருகிறோம். அவர் யாரிடமும் சகஜமாகப் பேசவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும்'' என்றனர்.

`சரிப்பட்டு வரமாட்டேன்; உனக்கு நல்ல பையன் கிடைப்பான்!'- பட்டதாரி பெண்ணை ஏமாற்றினாரா இன்ஜினீயர்?
danita
danita

தனிதா இறந்த தகவலை அவரின் பெற்றோருக்குப் போலீஸார் போனில் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சென்னை வந்தனர். தனிதாவின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், தனிதாவின் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே பெண் இன்ஜினீயர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.