Published:Updated:

சென்னை: டைரியில் எழுதபட்ட ரூ.4 லட்சம் கடன்! - அதிகாலையில் விபரீத முடிவெடுத்த தோட்டக்காரர்

Suicide
Suicide ( Representational Image )

சென்னையில் ஊரடங்கால் வேலையை இழந்த தோட்டக்காரர், 4 லட்சம் ரூபாய் கடன் தொகையைத் திரும்ப செலுத்த முடியாத மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை உள்ளகரம், ராஜாஜிதெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவரின் மனைவி பாண்டிலட்சுமி (45). முருகேசன், செடிகளுக்கு மருந்து வைப்பது மற்றும் தோட்ட வேலையைச் செய்து வந்தார். இவர்களின் மகன் ஷியாம் சுந்தர், தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். மகள், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக முருகேசனுக்கு வேலை இல்லை. அதனால் பாண்டிலட்சுமி, நங்கநல்லூரில் உள்ள கடையில் வேலைபார்த்து குடும்பத்தை நடத்திவருகிறார்.

தற்கொலை
தற்கொலை
Representational Image

கடந்த 5-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் முருகேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் முருகேசன் மரணம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முருகேசனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது முருகேசன், விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது முருகேசன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். அதை என்னால் திரும்ப கொடுக்க முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.

சென்னை: `இரவு, பகல் என மாறி மாறி வேலை' - திருமணமான ஓராண்டுக்குள் வங்கி மேலாளர் தற்கொலை
தற்கொலை
தற்கொலை
Representational Image

டைரி அடிப்படையில் முருகேசன் யாரிடம் கடன் வாங்கினார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடன் நெருக்கடி, ஊரடங்கில் வேலை இழப்பு ஆகியவையே முருகேசனின் தற்கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் முருகேசன் தற்கொலை குறித்து அவரின் மனைவி பாண்டிலட்சுமி மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், `ஊரடங்கால் வேலை இல்லாத மனவிரக்தியிலும் கடன் தொல்லையாலும் என் கணவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதுகிறேன். எனது கணவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் மடிப்பாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு