Published:Updated:

சென்னை: தவறான நட்பு; அடிக்கடி தொல்லை! - ஆட்டோவுக்குள் கொல்லப்பட்ட தொழிலாளி

கொலை
கொலை

சென்னை எர்ணாவூர் பகுதியில் தவறான நட்பு காரணமாக ஆட்டோவுக்குள் கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜா (45). கூலித்தொழிலாளி. இவர் இரவு நேரங்களில் தெரு, பிளாட்பாரங்களில் படுத்துறங்குவார். சொந்தம் என யாரும் இல்லாத ராஜா, மாட்டுமந்தை மேம்பாலத்தின்கீழ் தங்கியிருந்தபோது அங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கும் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மாட்டு மந்தை மேம்பாலம் பகுதியிலிருந்து வேறு இடத்துக்கு ராஜா சென்றுவிட்டார். இவர், ஜூலை 1-ம் தேதி வடிவுடையம்மன் கோயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் படுத்துறங்கியுள்ளார்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

ஜூலை 2-ம் தேதி (நேற்று) ஆட்டோவுக்குள் ராஜா இறந்துகிடப்பதாகத் தகவல் பரவியது. இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஆட்டோவுக்குள் ரத்தக்காயங்களுடன் இறந்துகிடந்த ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் ஆட்டோவுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ராஜாவை 2 பேர் அடித்துக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

கொலைக்கான காரணம்?

இதையடுத்து அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்தபோது மாட்டுமந்தை மேம்பாலத்தின்கீழ் குடியிருக்கும் பெண்ணின் கணவர் அப்துல் கரீம் மற்றும் அவரின் நண்பர் கரிமுல்லா ஆகியோர் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது அப்துல் கரீம், கொலைக்கான காரணத்தை போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அப்துல் கரீமின் மனைவி ஹாஜிதாவுக்கும் ராஜாவுக்கும் தவறான நட்பு இருந்துள்ளது. இந்தத் தகவல் அப்துல் கரீமுக்கு தெரிந்ததும் மனைவியைக் கண்டித்துள்ளார்.

திருவொற்றியூர் காவல் நிலையம்
திருவொற்றியூர் காவல் நிலையம்
சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

இதையடுத்து ஹாஜிதா, திருந்தி வாழ்ந்துள்ளார். ஆனால், ராஜா அடிக்கடி ஹாஜிதாவுக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளார். இதுகுறித்து ஹாஜிதா, கணவர் அப்துல் கரீமிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகே ராஜாவைக் கொலை செய்ய அப்துல் கரீம் மற்றும் அவரின் நண்பர் கரிமுல்லா ஆகியோர் திட்டமிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அன்று ராஜா, ஆட்டோவில் படுத்திருக்கும் தகவல் கிடைத்ததும் இருவரும் அங்கு சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோவுக்குள் வைத்தே ராஜாவைக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிவிட்டனர். விசாரணையில் இந்தத் தகவல் கிடைத்ததும் அப்துல் கரீம், அவரின் நண்பர் கரிமுல்லா, ஹாஜிதா ஆகியோரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

`லேப்டாப்பிலேயே அவ்வளவு ஆபாசப் படங்கள்!' - சுஜி தங்கை புகாரால் சீறும் சிபிசிஐடி
அடுத்த கட்டுரைக்கு