Published:Updated:

`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

இன்ஜினீயர் செந்தில்நாதன்
இன்ஜினீயர் செந்தில்நாதன்

நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது சந்தித்த இன்ஜினீயரைக் காதலித்து கரம் பிடித்த சென்னைப் பெண்ணின் திருமண வாழ்க்கையில் 11 மாதங்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மதுரவாயல், அய்யாவு நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `எனது தங்கை விக்னி நாக நந்தினி (26) என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கும் கடந்த 23.6.2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தை இல்லை. எனது தங்கையின் கணவர் செந்தில்நாதன், கிண்டியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துவந்தார்.

திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் வேலைக்காக செந்தில்நாதன் சென்னை வந்துவிட்டார். எனது தங்கையை, மாமனார் சீனிவாசன், மாமியார் வசந்தகுமாரி, நாத்தனார் சீதாலட்சுமி ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

`எனக்கு வரதட்சணை வேண்டும்... ஒரே ஒரு கண்டிஷன்!' -பேராவூரணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சப் கலெக்டர்
திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

மேலும், நகை வேண்டும் என வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர். தினந்தோறும் நடக்கும் கொடுமைகளை எங்களிடம் சொல்லி அழுவாள். நாங்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தோம். கடந்த 2 மாதத்திற்கு முன்பு எனது தங்கையிடம் வரதட்சணை கேட்டு அடித்து துரத்திவிட்டனர். எனது தங்கை கணவரிடம் நியாயத்தைக் கேட்ட போது `நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன். நீ செத்துப் போ' என மிரட்டியுள்ளார்.

சம்பவத்தன்று உறவுக்காரப் பெண்ணுடன் நந்தினிக்கு எஸ்.எம்.எஸ்- ல் வாக்குவாதம் நடந்துள்ளது. அதை செந்தில்நாதனிடம் நந்தினி தெரிவித்தபோது, `உன்னுடன் வாழ விருப்பம் இல்லை செத்துத் தொலை' என மிரட்டியுள்ளார். வேதனை தாங்க முடியாத எனது தங்கை தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து எங்களது வீட்டின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்துவிட்டன.

`மறுமணத்துக்கு முன் மலர்ந்த நட்பு; நகையை இழந்த சென்னைப் பெண்!' - அதிர்ச்சி கொடுத்த 2 செல்போன்கள்

பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனது தங்கை வாழ்க்கையை நாசப்படுத்தி வரதட்சணை கொடுமை செய்த செந்தில்நாதன், அவரின் அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிந்து விசாரித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னி நாக நந்தினி, தன்னுடைய செல்போனிலிருந்து செந்தில்நாதனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் செந்தில்நாதனிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்நாதனின் பெற்றோர் மற்றும் சகோதரியை போலீஸார் தேடிவருகின்றனர்.

`இரண்டு ஆடுகள் சீதனம்; டி.வியை தூக்கிக்கொண்டு ஓட்டம்!'- மதபோதகருக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்

இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``விக்னி நாக நந்தினி, 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரித்துள்ளார். அப்போதுதான் வரதட்சணைக் கொடுமையால் விக்னி நாக நந்தினி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததும் இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விக்னி நாக நந்தினியும் செந்தில்நாதனும் வேலைக்காக ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் பெற்றோர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

விக்னி நாக நந்தினிக்கு அப்பா இல்லை. அதனால் அவரின் சகோதரர்கள்தான் திருமணச் செலவுகளைச் செய்துள்ளனர். இந்தச் சமயத்தில் செந்தில்நாதனுக்கு 5 சவரனில் தங்கச் செயின் போடுவதாக விக்னி நாக நந்தினியின் வீட்டினர் சம்மதித்துள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக செயின் போடவில்லை. அதைக் கேட்டு விக்னி நாக நந்தினியின் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால்தான் விக்னி நாக நந்தினி, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 2-வது மாடியிலிருந்து கீழே குதித்த விக்னி நாக நந்தினியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு பற்கள் உடைந்துள்ளன. அவரின் நிலைமை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு - 25,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை! #NowAtVikatan

மாடியிலிருந்து குதிப்பதற்கு முன் விக்னி நாக நந்தினி, செல்போனில் மே 25-ம் தேதி செந்தில்நாதனுடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. `தயவு செய்து போனை எடு, கடைசியா உன்கிட்ட பேசணும்' என மெசேஜ் செய்துள்ளார். `நீ போனை எடுக்கவில்லை. என் முடிவுக்கு நீதான் காரணம்' என்றும் மெசேஜ் செய்துள்ளார். அதற்கும் செந்தில்நாதனிடமிருந்து பதில் இல்லை. அதனால் மனம் உடைந்த விக்னி நாக நந்தினி, மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். செந்தில்நாதன், கிண்டியில் உள்ள ஐடி வேலையை விட்டுவிட்டு பண்ருட்டியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். விக்னி நாக நந்தினி, எம்.ஏ படித்துள்ளார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு