Published:Updated:

`நீ போனை எடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வருவேன்!' -காதலனின் எஸ்எம்எஸ்-ஆல் விபரீத முடிவெடுத்த காதலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்
செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ் ( மாதிரிப் படம் )

நீ போனைஎடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வருவேன் என்று காதலன் எஸ்எம்எஸ் அனுப்பியதால் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையைச் சேர்ந்த வள்ளி என்பவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் சந்தியா (பெயர் மாற்றம்) (21). இவர் பிசிஏ பிடித்து விட்டு அந்தப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். கடந்த 10-ம் தேதி எங்கள் வீட்டுக்கு ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். அவர், என்னுடைய மகளை காதலிப்பதாகக் கூறினார். அதுகுறித்து என்னுடைய மகளிடம் விசாரித்தபோது அவரும் அந்த இளைஞரை விரும்புவதாகத் தெரிவித்தார்.

செல்போன்
செல்போன்

இதையடுத்து வீட்டுக்கு வந்த இளைஞரிடம் என்னுடைய மாமனார் கடந்த 18-ம் தேதி இறந்து விட்டார். அதனால் இப்போது எதுவும் பேச முடியாது என்று கூறினேன். அந்த இளைஞரும் தனக்கு சகோதரிகள் உள்ளனர். அவர்களை திருமணம் செய்து கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து சந்தியாவை திருமணம் செய்வதாக கூறிவிட்டு சென்றுவிட்டான். அதன்பிறகு சந்தியாவை நாங்கள் வேலைக்கு அனுப்ப வில்லை. மேலும் அவளின் செல்போனையும் நாங்கள் வாங்கி வைத்துக் கொண்டோம்.

சென்னை: விபத்தில் காதலன் மரணம்; 10-வது நாள் தற்கொலை செய்துகொண்ட காதலி!

அதனால் ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர், தொடர்ந்து சந்தியாவின் செல்போனுக்கு போன் செய்து வந்தார். ஆனால் சந்தியா, நாங்கள் என யாரும் போனை எடுக்கவில்லை. இந்தச் சூழலில், `அந்த பையன் வேண்டாம்’ என்று என் மகளும் எங்களிடம் சொல்லிவிட்டார். இந்தநிலையில் சந்தியாவின் செல்போனுக்கு, `நீ போனை எடுக்கவில்லை என்றால் நான் வீட்டுக்கு வருவேன்’ என்று அந்தப் பையன் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தான். அதனால் சந்தியா பதற்றமாகவே இருந்தாள்.

தற்கொலை
தற்கொலை

கடந்த 12-ம் தேதி காலை என்னுடைய கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். நானும் சந்தியாவும் வீட்டில் இருந்தோம். நான் வீட்டின் வெளியில் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு சந்தியா உதவி செய்தாள். பிறகு அவள் சாப்பிட வீட்டுக்குள் சென்றாள். நான் துணிகளை காய வைத்து விட்டு அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் சென்றேன். அப்போது மின்விசிறியில் நைலான் கயிற்றில் சந்தியா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டேன். பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கயிற்றை அறுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தியாவை கொண்டு சென்றோம். அங்குள்ள டாக்டர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். அதனால் அவளை அங்கு கொண்டு சென்றோம். அப்போது அவளை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். எனவே எனது மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தி பிரேத பரிசோதனைக்குப்பிறகு சடலத்தை எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அண்டனி ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு