Published:Updated:

சென்னை: டி.என்.ஏ பரிசோதனை செய்யக் கட்டாயப்படுத்திய காதலன் - குழந்தைபெற்ற 9-வது நாளில் பெண் தற்கொலை!

தற்கொலை!

சென்னையில் குழந்தை பெற்ற 9-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: டி.என்.ஏ பரிசோதனை செய்யக் கட்டாயப்படுத்திய காதலன் - குழந்தைபெற்ற 9-வது நாளில் பெண் தற்கொலை!

சென்னையில் குழந்தை பெற்ற 9-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் கோபிநாத் (55). இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் கடந்த 30.12.2021-ம் தேதி புகார் அளித்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறேன். நான் கார் டிரைவராக வேலை பார்த்துவருகிறேன். என் மனைவி பெயர் காமாட்சி. அவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். எங்களுக்கு ஒரு மகனும், கற்பகம் (27) என்ற மகளும் உள்ளனர்.

திருமணம்
திருமணம்

என் மகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது அங்கு வேலை செய்த யோகாநந்தம் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. யோகாநந்தத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவர் அடிக்கடி என்னுடைய மகளிடம் பிரச்னை செய்தார். அதனால் என் மகள், கணவரைப் பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக மகளுடன் தனியாக வசித்துவந்தார். அதன் பிறகு பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் என் மகள் வேலை பார்த்துவந்தார். அப்போது அவரோடு வேலை செய்யும் ஒரு பெண்ணின் அண்ணன் ஆகாஷ் என்பவருடன் எனது மகளுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். அதன் மூலம் என் மகள் கர்ப்பமடைந்தார். 21.12.2021-ம் தேதி என் மகளுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தன் குழந்தை இல்லை என ஆகாஷ் என் மகளிடம் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்தக் குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை எடுக்கும்படி ஆகாஷ், என் மகளிடம் கூறியுள்ளார். அதனால் என் மகள் மன வருத்தத்தில் இருந்துவந்தார்.

ஆகாஷ், கற்பகம்
ஆகாஷ், கற்பகம்

இந்த நிலையில் கடந்த 30.12.2021-ம் தேதி காலை 10 மணியளவில் என் மகள் தன்னுடைய மூத்த மகளை வீட்டில்விட்டு தற்போது பிறந்த குழந்தையோடு தனியாக இன்னொரு வீட்டிலிருந்தார். பின்னர் அம்மாவைப் பார்க்க என் பேத்தி சென்றபோது கதவு பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதனால் நீண்ட நேரம் கதவை தட்டினோம். அதன் பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றபோது புடவையில் என் மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாள். எனவே, என் மகளின் இறப்பு சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீஸார் இன்று பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

குழந்தை பிறந்து 9-வது நாளில் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism