Published:Updated:

`தவறாக நடந்துகொண்டார்; 100-க்கு போன் செய்தேன்' - சென்னை டாக்டர்மீது இளம்பெண் புகார்

சிகிச்சைக்குத் தனியாக வந்த இடத்தில் டாக்டர் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

representational image
representational image

சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (28) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரின் கணவருக்கு 6 மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோய்க்காகக் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது டாக்டர் அளித்த சிகிச்சை காரணமாக பூரண சுகமடைந்துள்ளார். பின்னர் டாக்டரிடம் லட்சுமியின் கணவர், தனக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை என்று கூறியுள்ளார்.

representational image
representational image

உடனே டாக்டர், சிகிச்சை எடுத்தால் குழந்தை பிறக்கும். அதற்கான மருந்துகளை ஏற்பாடு செய்துதருகிறேன் என்று கூறியுள்ளார். இந்தநிலையில், லட்சுமியின் கணவருக்கு டாக்டர் போன் செய்து நீங்கள் கேட்ட மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. கிளினிக்கில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். பணிநிமித்தம் காரணமாக லட்சுமியின் கணவர் கிளினிக் செல்ல முடியவில்லை. இதனால் லட்சுமி தனியாக அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கே இருந்த டாக்டர், லட்சுமியைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பரிசோதனை என்ற பெயரில் லட்சுமியிடம் டாக்டர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே டாக்டரின் அறையிலிருந்து வெளியில் வந்த லட்சுமி, காவல் கட்டுப்பாட்டு அறை போன் நம்பரான 100-க்கு கால் செய்துள்ளார். உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மஞ்சள் காமாலை நோய்க்காகக் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது டாக்டர் அளித்த சிகிச்சை காரணமாக பூரண சுகமடைந்துள்ளார். பின்னர், டாக்டரிடம் லட்சுமியின் கணவர், தனக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், குழந்தை இல்லை என்று கூறியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் டாக்டர் தலைமறைவாகிவிட்டாக போலீஸார் தெரிவித்தனர். கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லட்சுமி, தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியுள்ளார். டாக்டரிடம் விசாரித்தால்தான் என்ன நடந்தது எனத் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.