Published:Updated:

சென்னை: மருமகள்மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்! - கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொலை
News
கொலை

சென்னை மாம்பலத்தில் தூங்கிக்கொண்டிருந்த மருமகள்மீது கொதிக்கும் ஆயிலை ஊற்றிக் கொலை செய்த மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாம்பலம், மேட்லி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரின் மனைவி ஷாகின் (25). இவர் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்தார். ஷாகினுக்கும், அவரின் மாமியார் தாஜ் நிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில் கடந்த 26.11.2014-ம் தேதி ஷாகினுக்கும், அவரின் மாமியார் தாஜ் நிஷாவுக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஷாகின் தன்னுடைய அறைக்குச் சென்று தூங்கியிருக்கிறார். மருமகள்மீது ஆத்திரமடைந்த தாஜ் நிஷா, தூங்கிக்கொண்டிருந்த ஷாகின் மீது கொதிக்கும் ஆயிலை ஊற்றியிருக்கிறார். அதில் படுகாயமடைந்த ஷாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீர்ப்பு
தீர்ப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால் சிகிச்சை பலனின்றி 17.12.2014-ம் தேதி ஷாகின் உயிரிழந்தார். இது குறித்து மாம்பலம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ஷாகினின் மாமியார் தாஜ் நிஷாவை (50) போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் 29.12.2021-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தாஜ் நிஷாவுக்கு ஆயுள் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்த மாம்பலம் போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார்.