Published:Updated:

10 வயது சென்னை சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 59 வயதுப் பூசாரி! - போக்ஸோவில் சிக்கிய பின்னணி

Representational Image
Representational Image

சென்னையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற 59 வயதுப் பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி, அழுதுகொண்டே இருந்தார். அதைப்பார்த்த சிறுமியின் அம்மா ஏன் அழுகிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது சிறுமி கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் சிறுமி கூறிய தகவலை மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர்.

Representational Image
Representational Image
போக்ஸோ முதல் உபா வரை... திருத்தப்பட்ட மசோதாக்கள் சொல்வது என்ன?

சிறுமியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அவரின் அம்மா, இன்ஸ்பெக்டர் முத்துகாமாட்சியிடம் விவரத்தைக் கூறினர். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி, புகாரின்பேரில் உரிய விசாரணை நடத்த மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகாமாட்சி, பாதிக்கப்பட்ட 10 வயதுச் சிறுமியைத் தனியாக அழைத்து விசாரித்தார். அப்போது, சிறுமி, சிவன் கோயிலில் பூசாரியாக இருக்கும் சிவக்குமார் (59) அங்கிள், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறினார். சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின்பேரில் பூசாரி சிவக்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவக்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அதனால் சிவக்குமார் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

சிவக்குமார்
சிவக்குமார்
``தினமும் 30 போன்கால்ஸ்; 6 பேர் கைது; லாக் டவுனால் அதிகரித்த குடும்ப வன்முறைகள்"- ஏடிஜிபி ரவி தகவல்

இதுகுறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``சிவக்குமார், சென்னை உள்ளகரத்தில் குடியிருந்து வருகிறார். இவர், சிவன் கோயிலில் பூசாரியாக உள்ளார். சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்ற சிவக்குமார், அவரிடம் அன்பாகப் பேசியுள்ளார். பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து வீட்டுக்கு வந்து விவரத்தைக் கூறியுள்ளார். 18-ம் தேதி மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அதன்பிறகு சிறுமியின் அம்மா அளித்த புகாரின்பேரில் சிவக்குமாரிடம் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு