Published:Updated:

`அவரின் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை!' - தற்கொலை செய்தவரின் மனைவி கதறல்

`தினந்தோறும் அவர்படும் வேதனையை என்னால் பார்க்க முடிவில்லை. கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தநிலையில் அவர் இப்படியொரு முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை.''

suicide
suicide

சென்னை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றம்). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கல்யாணி (பெயர் மாற்றம்) இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2015-ம் ஆண்டு மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளார் ராம். அப்போது அவரின் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ராம், படுத்தபடுக்கையாகி வீட்டிலேயே இருந்தார். இதனால் கல்யாணி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் கணவரையும் காப்பாற்றிவந்தார்.

Representational image
Representational image

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன்னுடைய ஆண் உறுப்பை பிளேடால் அறுத்திருக்கிறார் ராம். அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் நிலைகுலைய வைத்தது.

இதையடுத்து ராமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ராமின் மனைவி கல்யாணியிடம் விசாரித்தனர். அப்போது அவர், `கடந்த சில தினங்களாக ராம் மனவேதனையில் இருந்தார். அவரின் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை.

`மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார்!' - சென்னையில் பிரபல கார் விற்பனை நிறுவனப் பெண் நிர்வாகி தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்படிச் செய்துவிட்டார்' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். தற்கொலை செய்வதற்காக ராம், தேர்ந்தெடுக்க முறை வேதனை அளிக்கும் வகையில் உள்ளதால் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.