Published:Updated:

சென்னை மேயர் பிரியாவின் டி.பி வைத்த வாட்ஸ்அப் நம்பரிலிருந்து மெசேஜ் -மோசடிக் கும்பலைத் தேடும் போலீஸ்

சென்னை மேயர் பிரியா ராஜன்

அரசு அதிகாரிகள் பெயரில் வசூல்வேட்டை நடத்தியவர்கள், சென்னை மேயர் பிரியாவின் பெயரில் மோசடியில் ஈடுபடுவதாக அவரின் உதவியாளர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை மேயர் பிரியாவின் டி.பி வைத்த வாட்ஸ்அப் நம்பரிலிருந்து மெசேஜ் -மோசடிக் கும்பலைத் தேடும் போலீஸ்

அரசு அதிகாரிகள் பெயரில் வசூல்வேட்டை நடத்தியவர்கள், சென்னை மேயர் பிரியாவின் பெயரில் மோசடியில் ஈடுபடுவதாக அவரின் உதவியாளர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
சென்னை மேயர் பிரியா ராஜன்

அரசு அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி நன்கொடை, பண உதவிகளைக் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் சிலர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் மோசடிக் கும்பல் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்கள் பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்த சம்பவங்களும் நடந்தன. ஆனாலும் மோசடிக் கும்பல் சிக்கவில்லை.

மேயர் போட்டோவை டி.பி-யாக வைத்த  வாட்ஸ்அப் நம்பர்
மேயர் போட்டோவை டி.பி-யாக வைத்த வாட்ஸ்அப் நம்பர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சூழலில்தான் சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை டி.பி-யாக வைத்து மோசடிக் கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட முயன்றிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், `மேயர் பிரியாவின் புகைப்படத்தை டி.பி-யாக வைத்துக்கொண்டு மோசடிக் கும்பல் வாட்ஸ்அப் மூலமாக மண்டல அதிகாரிகளிடம் வழக்கம்போலப் பேச தொடங்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு அமேசான் கிஃப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்பும்படி கூறிவருகின்றனர். இந்தத் தகவலை மண்டல அதிகாரிகள் மேயர் பிரியாவிடம் தெரிவித்த பிறகே இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அவருக்குத் தெரியவந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை பெரியமேடு போலீஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து எந்த நம்பரிலிருந்து பிரியாவின் டி.பி-யை வைத்து மெசேஜ்கள் அனுப்பப்பட்டன என்பதை சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சென்னை மேயர்
சென்னை மேயர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``மேயர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்துவருகிறது. புகாரோடு கொடுக்கப்பட்ட ஆதாரத்தில் மேயர் பிரியா, மாநகராட்சிக் கட்டடம் போட்டோஸ் டி.பி-யாக வைக்கப்பட்ட வாட்ஸ்அப் நம்பரிலிருந்து மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மோசடிக் கும்பல் யாரிடமெல்லாம் பணத்தை மோசடி செய்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை. மேலும் பணத்தை அனுப்பியதாகவும் யாரும் புகாரளிக்கவில்லை. விரைவில் மோசடிக் கும்பல் மீது நடவடிக்கை பாயும்" என்றனர்.